Vishwakarma Jayanti 2022: கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை!
Sep 17, 2022, 04:11 PM IST
கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஸ்ரீ விஸ்வகர்மா தொழில் கடவுளாக அனைவராலும் பூஜிக்கப்பட்டு வருகிறார். இந்தியா முழுவதும் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கரூரில் தேர்மிகு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்திய புகைப்படம்
விஸ்வகர்மா ஜெயந்தி திருநாள் காரணமாக விஸ்வகர்மா ஹோமம், கணபதி ஹோமம், பஞ்சபிரம்ம ஹோமம், நவக்கிரக ஹோமம், காயத்ரி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் போன்றவை நடத்தப்பட்டன.
மேலும் அந்தக் கோயிலில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் திருவுருவ சிலைக்கும், விஸ்வகர்மாவின் சிலைக்கும் பால், தயிர், மஞ்சள், இளநீர், அரிசி மாவு, கரும்பு சாறு, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின்னர் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமிகளுக்கு தீபாராதனை கும்பா ஆரத்தி, கற்பூர ஆரத்தி ஆகியவை காண்பிக்கப்பட்டு மக்களுக்கு தரிசனம் கொடுக்கப்பட்டது.
இந்த சிறப்பு நிகழ்ச்சியானது விஷ்வகர்மா சித்தி விநாயகர் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.