தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமிக்கு வழிபாடு செய்ய உகந்த நேரமும் வழிபாடும் குறித்த முழு விளக்கமும் இதோ!

சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமிக்கு வழிபாடு செய்ய உகந்த நேரமும் வழிபாடும் குறித்த முழு விளக்கமும் இதோ!

Kathiravan V HT Tamil

Oct 11, 2024, 07:00 AM IST

google News
நவராத்திரி வழிப்பாட்டை பொறுத்தவரை முதல் மூன்று நாட்கள் துர்க்கா தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் உரியவை. 10வது நாள் மூன்று தேவியரும் சேர்ந்து பராசக்தியாக தோன்றி மகிஷ்சாசுர அரக்கனை வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.

நவராத்திரி பண்டிகையின் 9ஆவது நாளில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். வீரத்தின் அடையாளமாக விளங்கும் துர்கா தேவியையும், செல்வத்தின் அடையாளமாக விளங்கும் மகா லட்சுமி தேவியையும் கல்வியின் அடையாளமாக விளங்கும் சரஸ்வதி தேவியையும் வழிபடும் தினங்களாக நவராத்திரி பண்டிகை அமைகின்றது. இந்த 9 நாட்களிலும் முப்பெரும் தேவியரை வழிபாடு செய்தால் கல்வி, செல்வம், வீரம் ஆகியவை முறையாக கிடைக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை ஆகும். 

சமீபத்திய புகைப்படம்

மேஷம் முதல் மீனம் வரை.. யாருக்கு சூப்பரான நாள்? நவம்பர் 27ம் தேதி 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Nov 26, 2024 09:16 PM

சனி ராகு முடிவெடுத்துவிட்டனர்.. இந்த ராசிகள் நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. இனி பண மழையா கொட்டுமாம்.. ஆனந்த கண்ணீர் தானாம்..!

Nov 26, 2024 05:15 PM

குரு.. அடடே இந்த ராசிகளா.. இனி பணமழை கொட்டுமாமே.. உச்ச ராசிகள் அணிவகுப்பு.. மகிழ்ச்சி ஊஞ்சலில் ஆடுவது உறுதி!

Nov 26, 2024 05:01 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Nov 26, 2024 03:41 PM

ஜாக்பாட் அடிக்கப்போகுது.. கடகத்தில் நுழைந்த செவ்வாய்.. இந்த ராசிகள் ரெடியா இருங்க!

Nov 26, 2024 03:24 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Nov 26, 2024 03:20 PM

நவராத்திரி வழிப்பாட்டை பொறுத்தவரை முதல் மூன்று நாட்கள் துர்க்கா தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் உரியவை. 10வது நாள் மூன்று தேவியரும் சேர்ந்து பராசக்தியாக தோன்றி மகிஷ்சாசுர அரக்கனை வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.  

சரஸ்வதி தேவியை மாணவர்கள் மட்டுமே வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் சரஸ்வதி அறிவுக்கடவுள் மட்டும் அல்ல; ஞானக்கடவுளும் கூட. எந்த ஒரு செயலை செய்யவும் ஞானமும் இருந்தால் மட்டுமே அந்த செயல் வெற்றிகரமாக அமையும். 

சரஸ்வதி பூஜை அன்று நாம் எதனால் வாழ்வு பெற்றுக் கொண்டு இருக்கிறோமோ அந்த பொருட்களை பூஜை செய்ய வேண்டும். இதனால்தான் இந்த தினம் ஆயுத பூஜை என்று அழைக்கப்படுகின்றது. குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக புத்தகங்களை பூஜையில் வைத்து வழிபடுவார்கள். இதை தொடர்ந்து செய்யும் போது வாழ்கையில் வெற்றி கிடைக்கும். இதன் வெளிப்பாடாகவே 10ஆம் நாளாக விஜய தசமி கொண்டாடப்படுகின்றது. 

அதாவது அம்மாள் ஆனவர் 9 நாட்கள் போருக்கு தயார் ஆகி 10ஆவது நாள் எல்லா அசுரர்களையும் அழித்து வெற்றியை பெற்றதன் அடிப்படையில் விஜயதசமி கொண்டாடப்படுகின்றது. 

சரஸ்வதி பூஜை வழிபாடு 

11-10-2024 அன்று காலை 8.20 மணி முதல் 10.20 மணி வரை வித்யாரம்பம் செய்ய நல்ல நேரம் ஆகும். இதே நேரத்தில் சரஸ்வதி பூஜை அல்லது ஆயுத பூஜை வழிபாடும் செய்யலாம். அல்லது 12 மணி முதல் 1.30 மணி வரை வழிபாடு செய்யலாம். மாலையில் வழிபாடு செய்ய விரும்புவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வழிபாட்டை செய்து கொள்ளலாம்.

விஜயதசமி வழிபாடு 

விஜயதசமி நாளில் கலை மற்றும் தொழில் தொடர்பான புதிய முயற்சிகளை தொடங்க நல்ல நாள் ஆகும். அதன் அடிப்படையிலேயே குழந்தைகளுக்கு வித்தைகளை கற்றுக் கொடுக்கும் வகையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 12-10-2024 அன்று விஜயதசமி நாள் அன்று காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், பின்னர் காலை 10.35 மணி முதல் 1.20 வரையும் வித்யாரம்பம் மற்றும் பூஜைகளை செய்ய உகந்த நாள். மாலையில் 6 மணிக்கு மேலும் பூஜை செய்து கொள்ளலாம். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி