தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Santan Saptami: நாளை வரும் சந்தான சப்தமி - சிவ பார்வதி வழிபாட்டில் முக்கிய நாள் - எந்த நேரத்தில் வழிபடலாம்.. மகிமைகள்

Santan Saptami: நாளை வரும் சந்தான சப்தமி - சிவ பார்வதி வழிபாட்டில் முக்கிய நாள் - எந்த நேரத்தில் வழிபடலாம்.. மகிமைகள்

Marimuthu M HT Tamil

Sep 09, 2024, 02:19 PM IST

google News
Santan Saptami: நாளை வரும் சந்தான சப்தமி - சிவ பார்வதி வழிபாட்டில் முக்கிய நாள்.. எந்த நேரத்தில் வழிபடலாம் என்பது குறித்தும், அதன் மகிமைகள் குறித்தும் பார்க்கலாம்.
Santan Saptami: நாளை வரும் சந்தான சப்தமி - சிவ பார்வதி வழிபாட்டில் முக்கிய நாள்.. எந்த நேரத்தில் வழிபடலாம் என்பது குறித்தும், அதன் மகிமைகள் குறித்தும் பார்க்கலாம்.

Santan Saptami: நாளை வரும் சந்தான சப்தமி - சிவ பார்வதி வழிபாட்டில் முக்கிய நாள்.. எந்த நேரத்தில் வழிபடலாம் என்பது குறித்தும், அதன் மகிமைகள் குறித்தும் பார்க்கலாம்.

Santan Saptami 2024: சந்தான சப்தமி விரதம் என்பது இந்து மதத்தின் முக்கிய விரதங்களில் ஒன்றாகும். தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் நல்லமுறையில் இருக்கவேண்டும் என இறைவனை வேண்டி அனுசரிக்கும் விரதமாகும். 

சமீபத்திய புகைப்படம்

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

இந்த விரதத்தின்மூலம் இறைவனின் ஆசி, குழந்தைகளுக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்து நாட்காட்டியின்படி, இந்த சந்தான சப்தமி விரதமானது, பாத்ரபத மாதத்தின் சுக்லப் பட்சத்தின் சப்தமி தேதியில் கொண்டாடப்படுகிறது. இந்த சந்தான சப்தமிக்கு ‘’லலிதா சப்தமி'' என்ற பெயரும் உண்டு.

த்ரிக் பஞ்சாங்கத்தின் படி, பத்ரபத் சுக்ல பட்சத்தின் சப்தமி தேதி செப்டம்பர் 09ஆம் தேதி இரவு 09:53 மணிக்குத்தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி இரவு 11:11 மணிக்கு முடிவடையும். சந்தான சப்தமி விரதம் நாளை செப்டம்பர் 10-ம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது.

சந்தான சப்தமிக்கான மங்களகரமான முகூர்த்தம்:

பிரம்ம முகூர்த்தம் - காலை 04:31 முதல் 05:17 வரை

அபிஜித் முகூர்த்தம்(நல்ல நேரத்தைத் தவறவிட்டவர்களுக்கு அடுத்த முகூர்த்தம்) - 11:52 AM முதல் 12:42 PM;

விஜய வேளை(இறைவழிபாட்டுக்கு உகந்தது) - 02:22 PM to 03:11 PM

கோதுளி காலம்(இறைவழிபாட்டுக்கு உகந்தது) - 06:31 PM முதல் 06:54 PM

அமிர்த காலம் - காலை 08:48 முதல் 10:32 வரை

சந்தான சப்தமி பூஜை எப்படி செய்வது?:

  • சந்தான சப்தமி பூஜைக்காக, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் புகைப்படம் அல்லது சிலையை அலங்கரிக்கவும்.
  •  சிவ-பார்வதியின் சிலையை வைத்த பிறகு, தென்னை ஓலைகளால் கலசத்தை சூழச்செய்யவும்.
  • இப்போது வில்வ இலை, பழங்கள், பூக்கள் மற்றும் இனிப்புகளை படைத்து ஊதுபத்தி, விளக்கு மற்றும் ஆரத்தி எடுத்து வழிபடுங்கள்.
  •  வழிபாட்டின்போது, சந்தான சப்தமி விரத கதையைப் படியுங்கள் அல்லது கேளுங்கள்.

சந்தான சப்தமியன்று ராகு காலம் மற்றும் பத்ரா நேரம் - சந்தான சப்தமியன்று ராகு காலம் மாலை 03.24 மணி முதல் 04.57 மணி வரை இருக்கும். பத்ரா நேரம்(கெட்ட ஆற்றலைத் தரும் நேரம்) இரவு 11.11 மணிக்குத் தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி காலை 06.03 மணிக்கு முடிவடையும்.

சந்தான சப்தமியின் முக்கியத்துவம்: 

குழந்தையின் மகிழ்ச்சிக்காகவும், அவரது நல்வாழ்வுக்காகவும் சந்தான சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதத்தின்போது சிவபெருமானும் பார்வதி தேவியும் வணங்கப்படுகிறார்கள். இந்த விரதத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், குழந்தைகள் நீண்ட ஆயுளைப் பெறுவார்கள் என்றும், வலி மற்றும் துக்கம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

பொறுப்பு துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி