தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி கொடுத்தால் எவர் தடுப்பார்? மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்! லாபஸ்தான இடம்!

சனி கொடுத்தால் எவர் தடுப்பார்? மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்! லாபஸ்தான இடம்!

Suguna Devi P HT Tamil

Nov 03, 2024, 11:25 AM IST

google News
மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் நான்காம் தேதி முதல் சனி வக்ர நிவர்த்தி பெற்று லாபஸ்தானம் ஆகிய 11ஆம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். எனவே மேஷ ராசிக்கு நீட்ச்சி அதிபதியாக இருக்கக்கூடிய சனி ஆட்சி பலம் பெற்று லாப ஸ்தானத்தை வலு சேர்ப்பது வரவேற்கத்தக்க ஒரு அமைப்பாக மேஷ ராசிக்காரர்களுக்கு பார்க்கப்படுகிறது.
மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் நான்காம் தேதி முதல் சனி வக்ர நிவர்த்தி பெற்று லாபஸ்தானம் ஆகிய 11ஆம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். எனவே மேஷ ராசிக்கு நீட்ச்சி அதிபதியாக இருக்கக்கூடிய சனி ஆட்சி பலம் பெற்று லாப ஸ்தானத்தை வலு சேர்ப்பது வரவேற்கத்தக்க ஒரு அமைப்பாக மேஷ ராசிக்காரர்களுக்கு பார்க்கப்படுகிறது.

மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் நான்காம் தேதி முதல் சனி வக்ர நிவர்த்தி பெற்று லாபஸ்தானம் ஆகிய 11ஆம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். எனவே மேஷ ராசிக்கு நீட்ச்சி அதிபதியாக இருக்கக்கூடிய சனி ஆட்சி பலம் பெற்று லாப ஸ்தானத்தை வலு சேர்ப்பது வரவேற்கத்தக்க ஒரு அமைப்பாக மேஷ ராசிக்காரர்களுக்கு பார்க்கப்படுகிறது.

மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் நான்காம் தேதி முதல் சனி வக்ர நிவர்த்தி பெற்று லாபஸ்தானம் ஆகிய 11-ஆம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். எனவே மேஷ ராசிக்கு நீட்ச்சி அதிபதியாக இருக்கக்கூடிய சனி ஆட்சி பலம் பெற்று லாப ஸ்தானத்தை வலு சேர்ப்பது நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒரு அமைப்பாக மேஷ ராசிக்காரர்களுக்கு பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சனிபகவான் நடுநிலைத் தவறாத நீதி தவறாத நியாயஸ்தராக செயல்படக்கூடியவர். தற்போது 3,6, 11 ஆகிய இடங்களில் அபரிவிதமான நன்மையை அள்ளிக்கொடுப்பார். 

சமீபத்திய புகைப்படம்

கும்ப ராசியில் நுழையும் சுக்கிரன்.. இந்த வாரமே இந்த நான்கு ராசிகளின் வாழ்க்கை மாறும்.. வருமான வளர்ச்சி இருக்கும்!

Dec 24, 2024 06:58 AM

6 வது வீட்டில் சனி..தொழிலில் சிரமம், தடுமாற்றம்.. பாடம் கற்பிக்கப்போகும் காகவாகனன்- தனுசு ராசிக்கு 2025 எப்படி?

Dec 24, 2024 06:52 AM

இந்த ராசிகளின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது.. கேதுவின் பெயர்ச்சி இவர்களுக்கு சாதகமாக இருக்கு!

Dec 24, 2024 06:51 AM

சனியின் நேரடி பெயர்ச்சி.. மகரம், ரிஷபம், கன்னி ராசிகளின் வாழ்க்கையில் இனி அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. கஷ்டங்கள் விலகும்!

Dec 24, 2024 06:43 AM

'சிறப்பான நாள் மக்களே.. செல்வம் தேடி வரும்.. கவனமா முடிவெடுங்க' இன்று டிச.24 மேஷம் முதல் மீனம் வரையான ராசிகளின் பலன்கள்!

Dec 24, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.24 உங்கள் கையில் அதிகம் பணம் சேருமா? - ராசிபலன் இதோ

Dec 23, 2024 04:55 PM

அதிலும் குறிப்பாக  11வது  இடத்தில் வக்ர நிவர்த்தி பெற்று ஆட்சி பலம் பெறுவது நல்ல நேரத்திற்கு முதன்மையான அறிகுறியாக நிச்சயம் மேஷ ராசிக்காரர்களுக்கு உள்ளது. 2025 ஆவது வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஏழரை சனி துவங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக இருக்கக்கூடிய இந்த நாட்கள் கோல்டன் பீரியட் என்று சொல்லக்கூடிய வகையில் நல்ல நேரத்திற்கான வாய்ப்புகள் மிக சிறப்பாக அமைவதற்கான முதன்மையான யோகம் நிச்சயமாக மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கிறது. 

ராசி அதிபதி செவ்வாய்

மேஷ ராசிக்காரர்களை பொறுத்த வரைக்கும் 10 மற்றும் 11-ஆம் இடத்தில் அதிபதி ஆகவும் ராசிக்கு நீட்ச அதிபதியாகவும் இருக்கிறார். சனிபகவானின் பார்வையில் ராசியின் அதிபதியான செவ்வாய் பகையாக இருந்தாலும் செவ்வாய் பார்வையில் ராசிக்கு சனி பகவான் சமகிரகமாக பார்க்கப்படுகிறார். எனவே அதீத நன்மை கொடுக்கக்கூடிய லாபஸ்தானம் என்று சொல்லக்கூடிய 11ஆம் இடத்தில் வக்கிர நிவர்த்தி பெறுவது முதன்மையான யோக பலன்களை நிச்சயமாக அள்ளிக் கொடுக்கக்கூடிய ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது. 

அச்சமூட்டும் சனி பகவான்

 பொதுவாக சனி என்றாலே மக்கள் மத்தியில் அதீத பயம் தான் ஏற்படும். ஆனால் உண்மையில் சனிபகவான் நீதி தவறாத நியாயஸ்தராக தான் இருக்கிறார். அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர் மிகப்பெரிய அளவில் மனித வாழ்வில் கொடுப்பதாக இருந்தாலும் ,கெடுப்பதாக இருந்தாலும் தன்னிகரற்ற ஆற்றலை வெளிப்படுத்தக்கூடுவார்.  சனி பகவான் நாம் செய்த பாவ புண்ணியங்களை துல்லியமாக கணக்கிட்டு அதன் அடிப்படையில் தான் அவருடைய பலனை நிறைவாக கொடுப்பார். அந்த வகையில் பார்க்கும்போது சனிபகவான் தற்போது கும்ப ராசியில் ஆட்சி பலன் பெற்று அமோகமான வளர்ச்சியை அள்ளிக் கொடுக்கக் கூடிய வகையில் நல்ல நேரத்திற்கான மிக சிறப்பான தருணம் என்பது துல்லியமாக மேஷ ராசி க்காரர்களுக்கு உறுதிப்படுத்துகிறார். 

 தன்னுடைய ஆதிக்கத்தை பல்வேறு விதமான பணிகளில் செலுத்தக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த கிரகமாக பார்க்கப்படுகிறார். சனி அஷ்டமத்தில் இருக்கும் போது பொருளாதார ரீதியான சிக்கல் இல்லை என்றாலும் கூட திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் முற்றிலும் தடைபடும். உறவுகளுக்கு இடையே பெரிய விரிசல் ஏற்படும். ஆனால் அதே சமயம் ஜென்மத்தில் சனி அமரும் போது கடன் சுமை அதிகமாக ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.  சனிபகவான் எப்படி அதிக சிரமங்களை ஏற்படுத்தக்கூடிய இடத்தில் அதிக சிரமங்கள் ஏற்படுகிறதோ அதே போன்று மேஷ ராசிக்காரர்களுக்கு தற்போது அதிக நன்மையை அள்ளிக் கொடுக்கக்கூடிய ஒரு இடத்தில் அமர்கிறார். எனவே தான் இனி வரக்கூடிய சில மாதங்களுக்கு லாப சனியினுடைய பலனை நிச்சயமாக பெறுவதற்கான யோகம் மேஷ ராசிக்கு உண்டு. 

 தொழில் ரீதியாக உச்சபட்ச லாபத்தையும் வளர்ச்சியும் நிறைவாக சந்திப்பதற்கான யோகம் உண்டு. ஐந்தாம் இடத்தை சனி பார்ப்பதால் பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்சனை மற்றும் குடும்ப உறவுகளிடம் இருக்கக்கூடிய சங்கடங்கள் நிச்சயமாக மறைந்து நல்ல நேரத்திற்கான அறிகுறி என்பதால் திட்டவட்டமாக சனியின் பத்திர நிபர்த்தி உறுதிப்படுத்துகிறது. 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி