தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ‘பூச்சொரிதல் விழா கோலாகலம்’ பச்சைப்பட்டினி விரதத்தில் சமயபுரம் மாரியம்மன்

‘பூச்சொரிதல் விழா கோலாகலம்’ பச்சைப்பட்டினி விரதத்தில் சமயபுரம் மாரியம்மன்

Priyadarshini R HT Tamil

Mar 12, 2023, 11:56 AM IST

Samayapuram Mariamman: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்செரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும்சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல்திருவிழா இன்று தொடங்கியது.
Samayapuram Mariamman: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்செரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும்சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல்திருவிழா இன்று தொடங்கியது.

Samayapuram Mariamman: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்செரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும்சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல்திருவிழா இன்று தொடங்கியது.

சக்திதலங்களில்மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாமல் சகல சவுபாக்கியங்களும் கிடைக்க மாசிமாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருந்து பக்தர்களின் துயரை துடைப்பார் என்பது ஐதீகம்.

சமீபத்திய புகைப்படம்

Uthiradam Nakshatram: ’சூரியனின் ஆசி பெற்றவர்கள்!’ உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

May 17, 2024 04:47 PM

சனி பொட்டு வைத்து பொங்கல் வைக்க போகிறார்.. வக்ரத்தில் கொட்டும் பணமழை.. உங்க ராசி என்ன?

May 17, 2024 03:53 PM

Jackpot: ஆடம்பர வாழ்க்கை கொடுக்கும் சுக்கிரன்.. மே மாதத்தில் இருந்து ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகளுக்கு இவர்கள் தான்

May 17, 2024 03:34 PM

திருமண யோகம் கொடுக்கும் சூரியன்.. கொஞ்சம் பேசாம இருங்க.. பணம் கொட்டும் யோகம் வருது

May 17, 2024 10:18 AM

குரு கும்மி எடுக்கப் போகிறார்.. அஸ்தமனத்தில் முரட்டு அடி.. 3 ராசிகள் கவனம்.. நீங்க என்ன ராசி!

May 17, 2024 10:08 AM

Best Friend Zodiac Signs: நட்புக்காக எதையும் செய்ய தயங்காத ராசிக்காரர்கள் யார் தெரியுமா.. அவர்களுக்கு நட்புதான் எல்லாம்

May 17, 2024 10:06 AM

அந்தவகையில், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்செரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும்சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல்திருவிழா இன்று தொடங்கியது.

இதையொட்டிஅதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் முடிந், காலையில் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்செரிதல் விழா தொடங்கியது. பங்குனிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த விழாசிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த 28 நாட்களும்அம்மனுக்கு படையல் கிடையாது. நைவேத்தியமாக நீர்மோர், பானகம், கரும்புச்சாறு, இளநீர் உள்ளிட்டவைகளையே படைத்து பக்தர்கள் வழிபட முடியும்.

இன்றுபூச்சொரிதல் துவங்கியதை முன்னிட்டு யானை முன் செல்லஆயிரக்கணக்கான பக்தர்கள் தட்டுகளில் பூக்களை ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணிதலைமையில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.

முக்கியஇடங்களில் கண் காணிப்பு கோபுரம்அமைத்து கண்காணிப்பதோடு பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

 

போக்குவரத்து மாற்றம்

ஞாயிற்றுக்கிழமைகளில்மாலை 5 மணி முதல் மறுநாள்காலை 9 மணி வரை திருச்சிக்குவந்து செல்லும் வாகனங்கள் போக்குவரத்து பாதைகளில் நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் கீழ்காணும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில்மதுரை - சென்னை மார்க்கம் செல்லும் வாகனங்கள் விராலிமலையிருந்து மணப்பாறை ஆண்டவர் கோவில் சந்திப்பு, தோகைமலை, குளித்தலை, முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். திண்டுக்கல் - சென்னை மார்க்கம் செல்லும் வாகனங்கள் மணப்பாறை ஆண்டவர் கோவில் சந்திப்பிலிருந்து தோகைமலை, குளித்தலை, முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.

துறையூர்- திருச்சி மார்க்கம் செல்லும் வாகனங்கள் முசிறி ரவுண்டானா, முசிறி பெரியார் பாலம், குளித்தலை, ஜீயபுரம், குடமுருட்டி பாலம் வழியாக சத்திரம் பஸ் நிலையம் செல்லவேண்டும். சேலம் - முசிறி - திருச்சி வழியாக செல்லும் வாகனங்கள் முசிறி பெரியார் பாலத்தில் இருந்து, குளித்தலை, ஜீயபுரம், குடமுருட்டி பாலம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

சென்னை - திருச்சி மார்க்கம் செல்லும் வாகனங்கள் சிறுகனூர், தச்சங்குறிச்சி, பூவாளுர் வழியாக சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வந்து பனமங்கலம் சந்திப்பு (என்.எச்.38) சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வந்தடைந்து, திருச்சி செல்ல வேண்டும்.

சிதம்பரம், அரியலூர் மார்க்கத்திலிருந்து சென்னைக்கு செல்லும் வாகனங்கள் பெருவளநல்லூரிலிருந்து குமுளூர், தச்சங்குறிச்சி வழியாக சிறுகனூர் சென்று சிறுகனூர் தச்சங்குறிச்சி, பூவாளுர் வழியாக சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வந்து பனமங்கலம் சந்திப்பு (என்.எச்-38) சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வந்தடைந்து, திருச்சிக்கு வர வேண்டும். எனவே, பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்படி போக்குவரத்து மாற்றத்தினை கவனத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்தகவலை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி