தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sabarimala: ஐயப்ப பக்தர்களுக்கு குட்நியூஸ்..இனி விமானத்தில் இதை எடுத்து செல்ல அனுமதி!

Sabarimala: ஐயப்ப பக்தர்களுக்கு குட்நியூஸ்..இனி விமானத்தில் இதை எடுத்து செல்ல அனுமதி!

Karthikeyan S HT Tamil

Nov 21, 2023, 07:04 PM IST

google News
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த விழாக் காலங்களில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.

சமீபத்திய புகைப்படம்

'நிதானம் தேவை..நினைத்தது நடக்கும்'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Dec 02, 2024 06:45 AM

’மேஷம் முதல் மீனம் வரை!’ சாதூர்யம்! அதிகாரம்! செல்வம் தரும் கூர்ம யோகம் யாருக்கு?

Dec 01, 2024 08:50 PM

Rasipalan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ நாளை டிச.02 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Dec 01, 2024 08:21 PM

துலாம் முதல் மீனம் ராசி வரை.. சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க..!

Dec 01, 2024 08:59 AM

சுக்கிரன் பெயர்ச்சி..மேஷம் முதல் கன்னி ராசி வரை..இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க..!

Dec 01, 2024 08:30 AM

குரு 2025-ஆம் ஆண்டு வரை விடமாட்டார்.. சொல்லி அடித்த போகும் ராசிகள்.. இவர்கள் இனிமேல் கில்லி தான்

Dec 01, 2024 07:15 AM

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை ஐயப்பன் கோயில் நடைதிறந்திருக்கும். அந்த வகையில் ஐயப்பன் கோயில் நடை கடந்த 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. பெரும்பாலும் கார்த்திகை 1 ஆம் தேதி ஐயப்ப பக்தர்கள் மாலை அணியத் தொடங்குவது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஜனவரி 15 ஆம் தேதி வரை விமானத்தில் தேங்காயுடன் இருமுடி கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ளது. முறையான பாதுகாப்பு சோதனைகளுக்கு பின் எடுத்துச் செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்ற அடிப்படையில், விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இதனால், ஐயப்ப பக்தர்கள் விமான பயணத்தை தவிர்க்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி