ஜூன் மாதம் உங்களுக்கு ஜாலிதான்!
May 28, 2022, 01:18 PM IST
ஜூன் மாதம் பலன்களைப் பெறப்போகும் ராசி குறித்து இங்கே காண்போம்.
நவக்கிரகங்களால் ஜூன் மாதம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். ஏனென்றால் அம்மாதம் தென்மேற்கு பருவமழை மாதமாகும். சூரிய பகவான் ஜூன் மாதம் ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிகளில் பயணம் செய்ய உள்ளார்.
சமீபத்திய புகைப்படம்
வரும் ஜூன் மாதம் பல கிரகங்கள் பெயர்ச்சி அடைய உள்ளன. இதனால் பலன் பெறப்போகும் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் எனக் காண்போம்.
ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிர பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள். இந்த மாதத்தில் நீங்கள் எடுத்த காரியம் நிறைவேறும். இதுவரை தடைப்பட்டிருந்த காரியங்கள் வெற்றி பெறும். ராகுவோடு சேர்ந்து சுக்கிர பகவான் 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
எனவே உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் நீங்கும். உங்கள் ராசிக்கு மங்கள யோகம் கூடி வந்துள்ளது. ஏனென்றால் சூரிய பகவான் 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
உங்கள் ராசியின் அதிபதியான சுக்கிர பகவான், உங்கள் ராசியிலேயே ஆட்சி செய்யப்போகிறார். அதனால் உங்கள் வீட்டில் மங்கல காரியங்கள் கட்டாயம் நிகழும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவீர்கள். துன்பங்கள் விலகி மகிழ்ச்சி பெருகும். செலவுகள் ஏற்பட்டாலும் பணம் வரவு அதிகமாக இருக்கும்.
எதிர்பாராத நேரத்தில் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். பணவரவிற்கான அத்தனை செயல்களும் கைகூடும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களை எதிர்த்து நின்றவர்கள் தானாகவே பின் செல்வார்கள்.
உடல்நலத்தில் அக்கறை தேவை. வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வீர்கள். வெளியே சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டு வீட்டில் சாப்பிடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். எதைச் சாப்பிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் இந்த முறை சிக்கல்கள் உங்களது உடல் ஆரோக்கியத்தில் உள்ளது. அதில் கவனம் செலுத்தினால் உங்களின் மகிழ்ச்சி பெருகும்.
டாபிக்ஸ்