Rasipalan : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை அக்.15 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Oct 14, 2024, 04:46 PM IST
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 15ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 15ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் நீங்கள் எடுக்கும் முடிவுகள் பெரிய பலனைதரும். நிலுவையில் உள்ள பழைய வேலைகள் முடிவடையும். நிதி ஆதாயம் கூடும். பழைய கடன்களை அடைப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் மீது வழக்கு பாயலாம். புத்திசாலித்தனமாக செயல்படவும். வேலை அதிகமாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சொத்து, வியாபாரம், முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். நீங்கள் நினைக்கும் பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாழ்கை துணையால் ஆதாயம் அடைவீர்கள். அன்றாடப் பணிகள் சாதகமாக அமையும். மனதில் குழப்பங்கள் வந்து போகும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் தீரும். சமூகம் மற்றும் பணியிடங்களில் மரியாதை கூடும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவாக இருப்பார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாள். நிலுவையில் இருந்த பணம் திரும்பக் கிடைக்கும். இந்த நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல்நல பிரச்னைகள் தீரும். சில புதிய திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மற்றும் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது. உங்கள் தொழில் வாழ்க்கையைப் பற்றி பெற்றோரிடம் பேச சரியான நேரம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று மனக்கவலைகளில் இருந்து விடுபடலாம். நிதி நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். சுற்றுலா செல்ல நேரிடலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆனால் எந்த ஒரு வேலையையும் மிகவும் கவனமாக செய்யுங்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு பணவரவு உண்டாகும். நிலம் வாங்குதல் மற்றும் விற்பதில் லாபம் கூடும். வாழ்க்கையில் வரும் எந்தச் சவாலையும் நன்றாகச் சமாளிப்பார்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பணப் பரிவர்த்தனைகளை கவனமாகச் சிந்தித்த பிறகே செய்ய வேண்டும். பணத்தை வீணாக்காமல் இருந்தால்தான் லாபம் கிடைக்கும். கவனமாக இருக்க வேண்டிய தேவை வலுவாக உள்ளது. புதிய வேலையை தொடங்கும் முன் கவனமாக இருங்கள். பிரச்சனைகள் வரலாம். பணியிட மாற்றம் சாத்தியமாகும். நீங்கள் மாணவராக இருந்தால் விளையாட்டில் சிறந்த வெற்றியை பெறலாம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தொலை தூரத்தில் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அன்புக்குரியவர்களுடனான உங்கள் உறவு மேம்படும். தனிப்பட்ட வாழ்க்கையில் சிறிய மாற்றங்கள் சாத்தியமாகும், இது உங்கள் வாழ்க்கையை பாதிக்கலாம். உங்களை உந்துதலாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேட வேண்டியிருக்கும். மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.