Rasipalan : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை அக்.14 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Oct 13, 2024, 03:59 PM IST
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 14ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 14ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் கல்விப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலர் மீது கோபத்தையும், சிலர் மீது அன்பையும் காட்டுவீர்கள். ஆன்மீக சமய இசையில் ஆர்வம் கூடும். வருமானம் அதிகரிக்கும். முழு நம்பிக்கையுடன் பணிகளை முடிப்பீர்கள். யணங்களால் நன்மை உண்டாகும். எழுத்து மற்றும் அறிவுசார் வேலைகளில் சுறுசுறுப்பு கூடும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பொறுமையின்மை இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். கட்டுமான வசதிகளை பெருக்குவீர்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம். பேச்சில் இனிமை இருக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். பயணச் செலவுகள் அதிகரிக்கலாம். நம்பிக்கையும் ஏமாற்றமும் கலந்த உணர்வுகள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். அதிக உழைப்பு இருக்க கூடிய நாள்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு சில பிரச்னைகள் வந்து சரியாகும். பொறுமையின் இருப்பதன் மூலம் அதனை சரி செய்ய முடியும். பேச்சில் இனிமை இருக்கும். சிலருக்கு பொறுப்புகள் உடன் கூடிய உத்யோக மாற்றம் உண்டாகும். பயணச் செலவுகள் அதிகரிக்கலாம். நம்பிக்கையும் ஏமாற்றமும் கலந்த உணர்வுகள் இருக்கும். பணியிடத்தில் அதிக உழைப்புகளை போட வேண்டி இருக்கும்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். அதிக உற்சாகத்தை தவிர்த்து கவனமுடன் முன்னோக்கி செல்வது முக்கியம். நண்பரின் உதவியால் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். மனம் கலங்கி கொண்டே இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பணவரவுக்கு ஏற்ற செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். தந்தை உங்கள் செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணை உடல்நலக் குறைவால் பாதிக்கப்படலாம். உங்கள் பேச்சுக்கு குடும்பத்திலும், சமூகத்திலும் மரியாதை கூடும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு பேச்சில் வலிமை கூடும். நண்பரின் உதவியால் தொழில் வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்கள் தந்தையிடம் பணம் பெறலாம். மனதில் கோபமும், திருப்தி இல்லாத எண்ணங்களும் வந்து போகலாம். உங்கள் உடல் நிலையில் அக்கறை காட்டுங்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் அமையும். பணியிடத்தில் சிரமங்கள் ஏற்படலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பொறுமை தேவைப்படும் நாள். உங்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருங்கள். இசையில் ஆர்வம் கூடும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். கல்வி பணிகளில் எச்சரிக்கையாக இருங்கள். மன உளைச்சல் ஏற்படும். குழந்தைகளும் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்படலாம். வாகன வசதி குறையும். ஆடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.