Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை அக்.14 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Oct 13, 2024, 04:11 PM IST
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 14ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 14ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சமீபத்திய புகைப்படம்
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். முழு நம்பிக்கை உடன் இந்த நாளில் செயல்படுவீர்கள். திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கல்வி பணிக்காக வெளியூர் செல்வீர்கள். பேச்சில் நிதானமும், பொறுமையும் தேவை. உங்கள் செயல்பாடுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் சிரமங்கள் வரலாம். தேவையற்ற சண்டைகள் மற்றும் சச்சரவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இடம் மாற்றம் சாத்தியமாகும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மனதில் ஏற்றத் தாழ்வுகள் வந்து போகும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். பணியில் மாற்றம் ஏற்படலாம். அதிக உழைப்பு இருக்கும். குடும்ப ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். சில இடையூறுகள் மற்றும் சங்கடங்களை சந்திக்க நேரலாம். எதிர்மறை எண்ணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். சிலர் புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தேவையற்ற கோபத்தை தவிர்க்கவும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ஒரு நண்பரின் உதவியுடன், உங்கள் தொழிலை விரிவுபடுத்த முதலீடு செய்யலாம். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். எழுதுதல் போன்ற அறிவுசார் வேலைகள் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிக்கும். உங்கள் மனம் மன அமைதியை தேடும். ஆனால் சில கவலைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் அதிக கோபத்தை தவிர்க்கவும். புதிய வேலைகளை தேடுபவர்கள் நேர்காணலில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் செயல்பாடுகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுவையான உணவை ருசிப்பதில் ஆர்வம் கூடும். மனதில் ஏமாற்றமும், அதிருப்தியும் வந்து போகும். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நம்பிக்கையும் விரக்தியும் கலந்த உணர்வுகள் மனதில் நிலைத்திருக்கும். திட்டமிடாத செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். திருமண வாழ்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் தேவையற்ற கோபத்தை குறைப்பதன் மூலம் வளர்ச்சி காண வேண்டிய நாள். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு பதவி உயர்வு உடன் கூடிய இடமாற்றம் உண்டாகலாம். தொழில் மற்றும் விபாரம் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். கலை அல்லது இசை ஆர்வம் பெருகும். தாயாரின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புகள் நிறைவேறும். அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தொடர்புகள் கிடைக்கும். தேவையற்ற சச்சரவுகளில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு மன அமைதி நிலைத்து இருக்கும். ஆனால் பேச்சில் நிதானம் காப்பது முக்கியம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். சமய இசையில் ஆர்வம் கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொறுமையாக செயல்பட வேண்டிய நாள். சிலர் ஆன்மீக சுற்றுலா செல்ல திட்டமிடலாம். வருமானம் குறைந்து செலவுகள் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படும். உங்கள் தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.