Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை அக்.10 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Oct 09, 2024, 03:39 PM IST
Rasipalan : வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 10ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 10ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சமீபத்திய புகைப்படம்
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. உங்கள் செயல்பாடுகளால் உறவுகள் விரிவடையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதல் விஷயத்தில் சில பிரச்னைகள் வந்து போகும். நிதி ஆலோசனை பெற அல்லது எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்க இன்று ஒரு நல்ல நாள். உங்கள் அனைத்து பணிகளையும் குறித்த நேரத்தில் முடிக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாள். சவால்களை ஆர்வமுடன் சந்தித்து வெல்வீர்கள். காதல் உறவுகள் சிறப்பாக அமையும். பணியிடத்தில் கவனம் உடன் செயல்படுங்கள். உடற்பயிற்சி செய்வது நன்மைகளை கொண்டு வரும். உடல் நலனில் கவனமாக இருங்கள், உடற்பரிசோதனை செய்ய நல்லநாள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் உண்மை உடன் செயல்படுவதன் மூலம் நன்மைகளை பெறும் நாள் இது. புதிய திட்டம் அல்லது புதிய பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கலாம். ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள். வெற்றி வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பண விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். உங்களின் பேச்சுத்திறனால் பல காரியங்களை வெற்றி உடன் முடிப்பீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக தெரிவியுங்கள். முன்னோக்கிய பாதையில் செல்லவும், உங்கள் திறனை உலகுக்குக் காட்டவும் பயப்பட வேண்டாம். நிதி விவகாரங்கள் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். உணவில் கவனம் தேவை. தொழில் வளர்ச்சியில் கவனமாக செயல்படுங்கள்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக சில ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் நாள். ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும். கவனமாக திட்டமிடுவதன் மூலம் வெற்றிகள் கிடைக்கும். நிதி விவகாரங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. நிதி தொடர்பான விவகாரங்களில் புதிய நபர்களிடன் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. திறமைகளை வளர்த்து கொள்ள நல்ல காலம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்கும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு மனம் மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டகும். உடல் ஆரோக்கிய குறைப்பாடுகளை தீர்க்க மருத்துவம் சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது. இதனால் சிறிய உடற் பிரச்சனைகளை அதிகரிக்காமல் தடுக்கலாம். வாழ்கை துணை உங்களுக்கு உறுதுணையாக செயல்படுவார். தொழிலில் முன்னேற்றம் காண இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.