Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.06 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Nov 05, 2024, 02:32 PM IST
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 06 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 06 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சமீபத்திய புகைப்படம்
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டிய நாள். உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில மனக்கசப்புகள் வரலாம். கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள். இன்று உங்களின் நீண்ட நாள் பிரச்சனை தீரும். குடும்பத்தினரின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் கனவுகள் அனைத்தும் இன்று நனவாகும். பொருளாதார நிலை மேம்படும். பெற்றோரின் ஆதரவுடன் புதிய வாய்ப்புகள் அமையும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியையும் பேணுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பணிச்சுமைகள் நிறைந்த நாள் இது. அலுவக பணிகளில் கூடுதல் பொறுப்புகளை பெறுவீர்கள். புதிய மாற்றங்களில் சற்று எச்சரிக்கையாக இருங்கள். வேறு யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். இதனால் பணியில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். இது மன அழுத்தத்தை குறைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று ஆடம்பரப் பொருட்களை வாங்க பணம் செலவு செய்வீர்கள். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். சிலர் புதிய வீடு அல்லது புதிய சொத்து வாங்கலாம். மாணவர்கள் படிப்பில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் சவால்களை சந்திக்க நேரிடலாம்.
கும்பம்
வேலை தேடும் கும்பம் ராசிக்காரர்களுக்கு புதிய வேலைகள் அமையும். சிலர் புதிய சொத்தில் முதலீடு செய்யலாம், ஆனால் நிதி விஷயங்களில் நிபுணர் ஆலோசனையைப் பெறத் தயங்க வேண்டாம். அலுவலகத்தில் சீனியர்கள் தரும் ஆலோசனைகள் நல்ல பலனைத் தரும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் இன்று குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை புறக்கணிக்காமல், காலக்கெடுவிற்குள் அனைத்து பணிகளையும் முடிக்கவும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.