சாபம் கொடுத்த விசுவாமித்திரர்.. சாபம் பெற்ற மன்னன்.. விமோசனம் கொடுத்த நாகநாதர்.. எங்கும் சிவபெருமான்
Nov 03, 2024, 06:00 AM IST
Nainarkovil: சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த எத்தனையோ கோயில்கள் இங்கு உள்ளன. அதில் ஒன்றுதான் ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோயில் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்.
சாபம் கொடுத்த விசுவாமித்திரர்.. சாபம் பெற்ற மன்னன்.. விமோசனம் கொடுத்த நாகநாதர்.. எங்கும் சிவபெருமான்
சமீபத்திய புகைப்படம்
விசுவாமித்திரர், மன்னன், நாகநாதர், சிவபெருமான், கோயில், ராமநாதபுரம், நயினார் கோயில்
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோயில் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் வரலாறு குறித்து தெரிந்து கொள்ளலாம்.
Naganathar Temple: மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. அந்த அளவிற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய கோயில்கள் கொண்ட பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் சிவபெருமான்.
ஆதிகாலத்திலிருந்து சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. மன்னர்கள் மண்ணுக்காக ஒருபுறம் போரிட்டு வந்தாலும் மறுபுறம் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே அதிக பொருள் செலவு கொண்டு மிகப் பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
குறிப்பாக இந்தியாவில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய அளவிற்கு சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நமது தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் உள்ளன. மன்னர் காலத்தில் தங்களது பக்தி மற்றும் கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காக வானுயர்ந்த கோயில்களை மன்னர்கள் கட்டி வைத்து சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து வந்த கோயில்கள் காலத்தால் அழிக்க முடியாத சரித்திர குறியீடாக இன்றுவரை திகழ்ந்து வருகிறது.
சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த எத்தனையோ கோயில்கள் இங்கு உள்ளன. அதில் ஒன்றுதான் ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோயில் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த கோயிலில் அமர்ந்திருக்கக் கூடிய சிவபெருமான் நாகநாதர் எனவும் தாயார் சௌந்தர்நாயகி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன. இந்த கோயிலின் திருத்தம் வாசுகி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. ராகு மற்றும் கேது உள்ளிட்ட கிரகங்களால் தோஷம் உள்ளவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டால் அந்த தோஷங்கள் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது மேலும் தொழில் தடை, திருமண தடை, குழந்தை தடை அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
தல வரலாறு
திரிசங்கு என்ற மன்னன் சூர்யவம்சத்தில் பிறந்தவர். இவர் வயது முதிர்ந்த காரணத்தினால் ஒரே நாளில் அரசு பதவியை விட்டுவிட்டு சொர்க்கம் செல்ல வேண்டும் என விரும்பினார். அவரது விருப்பத்தை வசிஷ்டரிடம் கூறினார். இதற்காக நீ ஒரு ஆண்டு முழுவதும் யாகம் செய்ய வேண்டும் அப்போதுதான் சொர்க்கம் செல்ல முடியும் என வசிஷ்டர் மகரிஷி தெரிவித்தார்.
இதனை மன்னர் ஏற்கவில்லை தனது கருத்தை மதிக்காத காரணத்தினால் மன்னனுக்கு வசிஷ்டர் சாபத்தை கொடுத்தார். இதன் காரணமாக வசிஷ்டர் மகரிஷுக்கு எதிரியாக இருக்கக்கூடிய விசுவாமித்திரரை மன்னர் சந்தித்தார்.
நமச்சிவாய என்ற மந்திரத்தை மனப்பூர்வமாக ஜெபித்து ஒரு யாகம் ஒன்றை நடத்தினால் ஒரே நாளில் சொர்க்கம் செல்ல முடியும். அதனை நான் செய்து காட்டுகிறேன் என மன்னனுக்கு விசுவாமித்திரர் உறுதி அளித்தார். இந்த யாகத்திற்காக வசிஷ்டர் மகரிஷி மற்றும் அவரது ஆயிரம் புத்திரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சாபத்தை வாங்கி வாழக்கூடிய ஒருவருக்காக யாகம் செய்ய முடியாது என அனைவரும் கூறிவிட்டனர். உடனே தன்னுடைய அழைப்பை ஏற்காதவர்கள் வேடர்களாக மாறும்படி விஸ்வாமித்திரர் சபித்து விட்டார். வசிஷ்டரின் ஆயிரம் புத்திரர்களும் சாபம் பெற்றதால் அதிலிருந்து நிவர்த்தி கேட்டு விசுவாமித்திரர்களிடம் நின்றனர்.
உடனே அவர் தெற்கே இருக்கக்கூடிய மருதூர் என்ற காட்டில் சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபட்டால் விமோசனம் பெறலாம் என கூறினார். அதன்படியே அந்த காட்டிற்கு வந்து புனித தீர்த்தங்களின் நீராடி அங்கிருந்த நாகநாதரை அவர்கள் வழிபட்டனர். அதற்குப் பிறகு அவர்களுக்கு சாப விமோசனம் கொடுக்கப்பட்டது. அதுதான் தற்போது நாம் காண்கின்ற அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்.