Sunday Temple :வேண்டி நின்ற குறுநில மன்னர்கள்.. வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கம்.. காட்சி கொடுத்த விருத்தாச்சலேஸ்வரர்
Sunday Temple: சிறப்பு மிகுந்த கோயிலாக விளங்கி வருவது தான் சேலம் மாவட்டம் வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக் கூடிய சிவபெருமான் விருத்தாச்சலேஸ்வரர் எனவும் தாயார் விருத்தாம்பிகை எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Sunday Temple: உலகம் முழுவதும் சிவபெருமானுக்கென பக்தர்கள் கூட்டம் கடல் போல் இருந்து வருகிறது. இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. சிவபெருமானின் புகழ் மறையாத அளவிற்கு மன்னர்கள் எத்தனையோ மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
சிவபெருமானின் புகழை பறைசாற்றும் படி உலகம் முழுவதும் மிகப்பெரிய கோயில்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர்கள் கட்டி வைத்துச் சென்றுள்ளனர். பல எல்லைகளை கடந்து போரிட்டு பல நிலங்களை தன் வசம் மன்னர்கள் ஆக்கியுள்ளனர். இருப்பினும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே கோயில்கள் கட்டி மன்னர்கள் பக்தியால் போரிட்டு வந்துள்ளனர்.
இன்றுவரை காலத்தால் அழிக்க முடியாத சரித்திர குறியீடாக அந்த கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய சோழனாக விளங்கிய ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் அதற்கு சான்றாக விளங்கி வருகின்றது.
மதுரையில் பாண்டிய மன்னர்கள் கட்டிய மீனாட்சி அம்மன் திருக்கோயில் வரலாற்றுச் சுவடாக இன்று வரை இருந்து வருகிறது. மன்னர்கள் எதிரிகளாக இருந்தாலும் பக்தியை பொறுத்தளவில் அனைவரும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.
அந்த வரிசையில் சிறப்பு மிகுந்த கோயிலாக விளங்கி வருவது தான் சேலம் மாவட்டம் வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக் கூடிய சிவபெருமான் விருத்தாச்சலேஸ்வரர் எனவும் தாயார் விருத்தாம்பிகை எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
பிரணவ மந்திரத்தின் பொருளை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே முருகப்பெருமானின் ஞானத்தை உலகறிய செய்தார் சிவபெருமான். முருகப்பெருமானிடம் சிஷ்யன் போல் பிரணவ மந்திரத்தின் பொருளை சிவபெருமான் கேட்டுக்கொண்டார். ஆனால் பிரணவ மந்திரத்தின் ஆதாரமே சிவபெருமான்தான். அதனை உணர்த்துவதற்காகவே இந்த திருக்கோயிலின் கருவரை ஓம் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
உங்க வீற்றிருக்கக் கூடிய சிவபெருமானை வழிபட்டால் கல்வி, குடும்ப வாழ்க்கை, திருமண வாழ்க்கை, தொழில் வாழ்க்கை உள்ளிட்டவைகள் விரித்து அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கோயிலின் தெற்கு பிரகாரத்தில் 14 படிகள் அமைக்கப்பட்டு பாதாளத்தில் பாதாள கணபதி காட்சி கொடுத்திருக்கிறார். ஆந்திராவில் உள்ள காளகஸ்தி கோயிலின் அமைப்பை இது கொண்டிருக்கும்.
தல வரலாறு
முன்பு இருந்த காலத்தில் இந்த பகுதியில் குறுநில மன்னர்கள் இருவர் வசித்து வந்தனர். அவர்கள் சிவபெருமான் மீது மிகுந்த பத்துக் கொண்டவர்களாக இருந்தனர். பிரதோஷ நாளில் விருதாச்சலத்தில் இருக்கக்கூடிய விருத்தாச்சலேஸ்வரரை வழிபாடு செய்வதை இவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். ஒருமுறை பிரதோஷ பூஜைக்காக செல்லும்பொழுது கன மழை பெய்துள்ளது.
அந்த வழியில் சென்ற ஆற்றில் வெள்ளம் அதிகமாக ஓடியது ஆற்றல் கடக்க முடியாத காரணத்தினால் பிரதோஷ நேரத்திற்குள் சிவபெருமானை தரிசிக்க வேண்டும் என வருத்தத்தில் இருந்துள்ளனர். உடனே ஆற்றின் நடுவில் வழி கிடைத்துள்ளது பின்னர் சுவாமியை சென்று குறுநில மன்னர்கள் தரிசனம் செய்தனர்.
மறுமுறை பிரதோஷ பூஜைக்காக கோயிலுக்கு செல்லும் பொழுதும் இதே போல நிகழ்ந்துள்ளது. உடனே சிவபெருமானை நினைத்து அந்த குறுநில மன்னர்கள் வழிபாடு செய்துள்ளனர். இருப்பினும் அந்த ஆற்றில் வழி கிடைக்கவில்லை. மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி விட்டனர்.
உடனே அந்த குறுநில மன்னர்களுக்கு அசரீரி ஒன்று கேட்டு உள்ளது. பிரதோஷ பூஜைக்கு செல்ல முடியவில்லை என்று நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் இந்த கரையின் ஓரமாக இருக்கக்கூடிய வன்னி மரத்தின் அடியில் நான் சுயம்புவாக காத்துக் கொடுத்து வருகிறேன் நீங்கள் இங்கேயே என்னை தரிசனம் செய்யலாம் என கேட்டுள்ளது.
மகிழ்ச்சி அடைந்த குறுநில மன்னர்கள் அந்தப் பகுதியில் இருந்த வன்னி மரத்தின் கீழ் சுயம்புலிங்கமாக இருந்த சிவபெருமானை வழிபட்டுள்ளனர் அதன் பின் அங்கு கோயிலும் கட்டியுள்ளனர் அந்த கோயில்தான் தற்போது இருக்கக்கூடிய அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்