Raja Yogam: மேஷம் முதல் மீனம் வரை! உங்கள் லக்னத்திற்கு ராஜயோகம் தரும் கிரகங்களும் யோகங்களும்…!
Sep 22, 2024, 08:45 PM IST
நட்பு கிரக தசைகள் நாம் அனுபவிக்கும் வயதில் வரவேண்டும் என்பது இரண்டாவது விதி ஆகும். அனுபவிக்கும் வயதில் அந்த தசைகள் வரவில்லை என்றாலும் தசாபுத்தி காலத்தில் யோக பலன்கள் கிடைக்கும்.
யோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் பரவி கிடக்கின்றன. யோகங்களுடைய விதிகள் அடிப்படையில் பார்த்தோம் எனில் யோகத்தை கொடுக்கக்கூடிய கிரகங்கள் உங்கள் லக்னத்திற்கு நண்பர்களாக இருக்க வேண்டும் என்பது முதல் விதி ஆகும்.
சமீபத்திய புகைப்படம்
நட்பு கிரக தசைகள் நாம் அனுபவிக்கும் வயதில் வரவேண்டும் என்பது இரண்டாவது விதி ஆகும். அனுபவிக்கும் வயதில் அந்த தசைகள் வரவில்லை என்றாலும் தசாபுத்தி காலத்தில் யோக பலன்கள் கிடைக்கும்.
மேஷம்
மேஷ லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதியான செவ்வாய் பகவான் லக்னம் அல்லது கேந்திரத்தில் வலுப்பெறுவதன் மூலம் உருவாகும் ருச்சக யோகம் என்பது முதல் தரமான ராஜ யோகம் என்று வகைப்படுத்தப்படுகின்றது. இதுமட்டுமின்றி சந்திர மங்கல யோகம், குரு சந்திர யோகம், சிவராஜ யோகம் ஆகியவை சிறப்பாக செயல்படும் யோகங்களாக உள்ளது. சுக்கிரனால் மாளவிகா யோகம், சனி பகவானால் கிடைக்கும் சச யோகம் முழு பலன்களை தரும் என்று சொல்ல முடியாது.
ரிஷபம்
ரிஷப லக்னத்தை பொறுத்தவரை சுக்கிரன் மூலம் உருவாகும் மாளவிகா யோகம், புதன் மூலம் உருவாகும் பத்திர யோகம், சனி பகவானால் கிடைக்கக்கூடிய சச யோகம் சிறப்பாக வேலை செய்யும். குரு சந்திர யோகம், சந்திர மங்கல யோகம் பெரிய பலன்களை தராது. ஆனால் சூரியன் மூலம் கிடைக்கும் பௌர்ணமி யோகம் ஓரளவுக்கு நன்மைகளை தரும். புதனுடன் சூரியன் சேர்ந்து கிடைக்கக்கூடிய புதாதித்திய யோகம் நல்ல பலன்களை தரும்.
மிதுனம்
மிதுன லக்ன ஜாதகர்களை பொறுத்தவரை புத ஆதித்ய யோகம், பத்ர யோகம், மாளவிகா யோகம், சச யோகம், தர்ம கர்மாதிபதி யோகம் சிறப்பான பலன்களை தரும்.
கடகம்
கடக லக்னத்திற்கு ஜாதகர்களை பொறுத்தவரைக்கும் மேஷ லக்னத்திற்கு ருச்சக யோகம், சந்திர மங்கல யோகம், குரு சந்திர யோகம், சிவராஜ யோகம் உள்ளிட்டவை சிறப்பான பலன்களை தரும். மேலும் பௌர்ணமி மற்றும் அமாவாசை சந்திரன் மூலம் கிடைக்கும் யோகம், சந்திர அதி யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், சந்திரமங்கள யோகம், சிவராஜ யோகம் உள்ளிட்டவை சிறப்பான நன்மைகளை தரும்.
சிம்மம்
சிம்ம லக்னத்திற்கு செவ்வாய், சந்திரன், குரு பகவான் மூலம் கிடைக்கக்கூடிய யோகங்கள் சிறப்பாக வேலை செய்யும். ஆனால் ஏதேனும் ஒரு துர்ஸ்தானத்திற்கு இவர்கள் அதிபதிகளாக வருவதால் நண்பர்களால் சிக்கல்களை சந்திக்க கூடிய அமைப்பு ஏற்படும். சந்திர மங்கள யோகம், குருமங்கள யோகம், குரு சந்திர யோகம் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி லக்னத்திற்கு பத்திர யோகம் மாளவிகா யோகம் இவர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும். தர்ம கர்மாதிபதி யோகம் அதி உன்னதமான பலன்களை கொடுக்கும். சனி பகவானால் கிடைக்கக்கூடிய சச யோகம், பௌர்ணமி மற்றும் அமாவாசை யோகங்களும் நன்மைகள் தரும்.
துலாம்
துலாம் லக்னத்திற்கு மாளவிக யோகம், பத்ர யோகம், மதனகோபால யோகம், சச யோகம் ஆகியவை சிறப்பான பலன்களை கொடுக்கும். 2 மற்றும் 7க்கு உடைய செவ்வாயோடு சுக்கிரன் சேர்ந்திருப்பதும் கூட ஒரு விதத்தில் நற்பலன்களை தரக்கூடிய பாக்கியதைகள் கொண்ட யோகமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிகம் லக்னத்திற்கு குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், தர்ம கர்மாதிபதி யோகம் சிறப்பான பலன்களை தரும். குரு-சந்திரன் இணைவு, குரு - சூரியன் இணைவு, செவ்வாய் - சந்திரன் இணைவு, செவ்வாய் - சூரியன் இணைவு யோகத்தை உண்டாக்கும்.
தனுசு
தனுசு லக்னத்திற்கு செவ்வாய் பகவான் மூலம் கிடைக்கும் யோகங்கள் எல்லாமே பலன்களை தராது. சூரியன் மூலம் உண்டாகும் யோகங்கள் சிறப்பான பலன்களை தரும். தர்ம கர்மாதிபதி யோகம் ஓரளவுக்கு வெற்றி வாய்ப்பை தரும். சிவராஜ யோகம் இவர்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும்.
மகரம்
மகர லக்னத்திற்கு தர்ம கர்மாதிபதி யோகம் முதல் நிலை ராஜயோகம் ஆகும். மதனகோபால யோகம், மாளவிகா யோகம், பத்திர யோகம், சச யோகம் சிறப்பான பலன்களை கொடுக்கும். மேலும் தேய்பிறை சந்திரன் மூலம் உண்டாகும் யோகங்களும், புத ஆதித்திய யோகமும் நல்ல பலன்களை கொடுக்கும்.
கும்பம்
கும்ப லக்னத்திற்கு தர்ம கர்மாதிபதி யோகம், புத ஆதித்திய யோகம் சிறப்பான பலன்களை கொடுக்கும். சனி பகவான் மூலம் உண்டாகும் சச யோகம் நல்ல நன்மைகளை தரும். மாளவிக யோகம், மதன கோபால யோகம் ஓரளவு பலன்களை கொடுக்கும்.
மீனம்
மீன லக்னத்தை பொறுத்தவரை குரு, சந்திரன், சூரியன், செவ்வாய் பகவானால் கிடைக்கும் யோகங்கள் முழு நன்மைகளை தரும். சூரிய பகவானால் கிடைக்கக்கூடிய யோகங்கள் ஓரளவுக்கு நன்மைகளை தரும்.