Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை! ’இந்த வாரம் செம அடி வாங்கும் ராசி எது? அடி கொடுக்க போகும் ராசி எது!’-weekly horoscopes for 12 zodiac signs aries to pisces from september 23rd to september 29th - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை! ’இந்த வாரம் செம அடி வாங்கும் ராசி எது? அடி கொடுக்க போகும் ராசி எது!’

Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை! ’இந்த வாரம் செம அடி வாங்கும் ராசி எது? அடி கொடுக்க போகும் ராசி எது!’

Kathiravan V HT Tamil
Sep 22, 2024 05:30 PM IST

Weekly Horoscope: செப்டம்பர் 23 முதல் 29 வரை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசிபலன்கள்

Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை! ’இந்த வாரம் செம அடி வாங்கும் ராசி எது? அடி கொடுக்க போகும் ராசி எது!’
Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை! ’இந்த வாரம் செம அடி வாங்கும் ராசி எது? அடி கொடுக்க போகும் ராசி எது!’

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பேச்சில் இனிமை கூடும். மனம் அலைக்கழிக்க கூடும். உங்கள் ஆரோக்கியத்தில் விழிப்புடன் இருங்கள். குடும்பத்தில் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வாகன வசதி ஏற்படும். ஆற்றல், தைரியம் கூடும். காதல் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். தொழிலில் முதலீடு செய்வதற்கு முன் சரியான ஆராய்ச்சி செய்யுங்கள், யோசிக்காமல் முதலீட்டு முடிவுகளை எடுக்காதீர்கள்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கை குறையும். மனம் கலங்கலாம். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். தேவையில்லாத கோபம் மற்றும் வாக்குவாதம் செய்வதை தவிருங்கள். கல்விப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பல்வேறு வருமான ஆதாரங்களில் இருந்து நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். ஆனால் உங்கள் செலவுகளுக்கும் வருமானத்திற்கும் இடையில் சமநிலையை பராமரிக்க முயற்சி செய்யுங்கள். பாதகமான சூழ்நிலைகளில் பணத்தை சேமிக்கவும். சிலர் இன்று கடனை திருப்பி செலுத்தலாம். அறப்பணிகளில் ஈடுபடுவீர்கள். 

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்து இருக்கும். கல்வி மற்றும் அறிவுசார் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்கலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். லாப வாய்ப்புகள் அமையும். உங்கள் வேலையில் அலட்சியமாக இருக்காதீர்கள் மற்றும் அனைத்து பணிகளையும் கடின உழைப்புடன் முடிக்கவும். சிலர் அலுவலக அரசியலில் ஈடுபடுவதால் நஷ்டம் ஏற்படலாம். இது உங்கள் பணியையும் பாதிக்கும்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு மனம் கலங்கும். நம்பிக்கை குறைவு ஏற்படும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். கோபத்தைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதைத் தவிருங்கள். மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள். சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட நேரம் ஒதுக்குங்கள். இந்த வாரம் நிதி விஷயங்களில் மிகவும் சாதகமாக இருக்கும். எதிர்பாராத வருமானம் மூலம் நிதி ஆதாயம் உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். முழு நம்பிக்கை உடன் செயல்படுவீர்கள். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். சிலருக்கு தொழிலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கல்வி பணிகளில் வெற்றி பெறுவீர்கள். இந்த வாரம் நீங்கள் சொத்து அல்லது பங்குகளில் சிந்தனையுடன் முதலீடு செய்யலாம். புதிய நிதித் திட்டத்தை உருவாக்கி, நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். கடன் அல்லது வாங்கிய பணத்தைத் திரும்பப் பெற இது ஒரு நல்ல நேரம். இருப்பினும், பணம் தொடர்பான முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுங்கள். இந்த வாரம் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனதில் குழப்பம் இருக்கும். பொறுமையை கடைப்பிடியுங்கள். குடும்பத்துடன் சில சமய ஸ்தலங்களுக்குச் செல்ல திட்டமிடலாம். குடும்பத்தில் ஆன்மீக காரியங்கள் நடைபெறும். வருமானம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். பணியிடத்தில் கவனமாக வேலை செய்து புதிய பொறுப்புகளை ஏற்கவும். நிதி விஷயங்களில் அதிக சவால்கள் இருக்காது. உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். வேலை மாறுவதற்கான புதிய வாய்ப்புகள் அமையும். நேர்முகத் தேர்வில் தடையின்றி வெற்றி பெறுவீர்கள். வாரத் தொடக்கத்தில் புதிய திட்டத்தைத் தொடங்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பார்கள். கலை, இசை மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். லாப வாய்ப்புகள் அமையும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். சிலருக்கு காதல் கைக்கூடும். புதிய காதல் பயணத்தை தொடங்குவீர்கள். சிலர் புதிய தொழில்களை துவங்குவீர்கள். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை நிறைந்த வாரமாக இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். சிலர் புத்தாண்டைகள் வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சம்பந்தமாக பிரச்சனைகள் தீரும். சிலர் பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்வீர்கள். அரசியல்வாதிகள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், சமையல் கலைஞர்கள், வழக்கறிஞர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். வாழ்கை துணை தொடர்பான விஷயங்களில் நேர்மையாக செயல்படுங்கள். 

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பேச்சின் வழியே செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். அதிக உழைப்பு இருந்தாலும் முழு நம்பிக்கை உடன் செயல்படுவீர்கள். சிலருக்கு பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் பல சுவாரசியமான திருப்பங்கள் ஏற்படும். ஏற்ற தாழ்வுகள் நிறைந்த தருணங்களை சந்திப்பீர்கள். சவால்களுக்கு பயப்படாமல், பிரச்சனையை தீர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். பொறுமையை கடைப்பிடியுங்கள். புத்திசாலித்தனமான முடிவுகளை எடுங்கள். தொழில் வாழ்க்கையில் அனைத்து பணிகளையும் படைப்பாற்றலுடனும் நம்பிக்கையுடனும் கையாளுங்கள்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கை குறையும். மனதில் ஏற்ற தாழ்வுகள் வந்து போகும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உரையாடலில் சமநிலை உடன் இருங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். வருமானம் அதிகரிக்கும். இந்த வாரம் கும்ப ராசிக்காரர்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். எதையும் வாங்கும் முடிவை அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. உங்கள் நிதி இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும், உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சமநிலையை பராமரிக்கவும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் இனம்புரியாத பயத்தால் சிரமப்பட நேரிடலாம். பொறுமையாக இருங்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமாக இருக்கவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். செலவுகளில் கவனம் செலுத்தவும். புதிய முதலீட்டு விருப்பங்களைக் கவனியுங்கள், ஆராய்ச்சி செய்யாமல் முதலீட்டு முடிவுகளை எடுக்காதீர்கள். நீங்கள் ஒரு புதிய வணிக ஒப்பந்தம் அல்லது புதிய திட்டத்தை தொடங்கலாம். இந்த வாரம், தொழில் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் நெட்வொர்க்கிங் அதிகரிக்கும். இதன் காரணமாக புதிய தொழில் கூட்டாளிகள் மூலம் வியாபாரம் பெருகும்.

Whats_app_banner