Rahu Ketu: ராகு கேது பணத்தை கொட்ட போகும் ராசிகள்
Jan 12, 2024, 03:30 PM IST
ராகு கேது இடமாற்றத்தால் பண வரவை பிறப்புக்கும் ராசிகளை காண்போம்.
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது இவர்கள் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக விளங்கி வருகின்றனர் அதிலும் ஜோடியாக பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக ராகு மற்றும் கேது விளங்கி வருகின்றனர்.
சமீபத்திய புகைப்படம்
ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் இடமாற்றம் செய்தனர்.
இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் நல்ல பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
ராகு மற்றும் கேது உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றனர். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். நிம்மதியான வாழ்க்கை உருவாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பணவரவில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் ராகு கேது பயணம் செய்து வருகின்றனர். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிரந்தரமாக வெளிநாடு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் மற்ற துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல சூழ்நிலை உண்டாகும்.
மிதுன ராசி
ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் விலகும். மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும் பணவரவில் இருந்த குறையும் இருக்காது. மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9