தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’ராகுவால் லாட்டரி யோகம் அடிக்குது! காதல் திருமணம் நடக்குது!’ கடகம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

’ராகுவால் லாட்டரி யோகம் அடிக்குது! காதல் திருமணம் நடக்குது!’ கடகம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil

Nov 18, 2024, 04:59 PM IST

google News
கடகம் ராசிக்காரர்கள் கடந்த சில மாதங்களாக கடும் சிரமத்தை சந்தித்து வந்தீர்கள். அஷ்டம சனி பாதிப்பு மன உளைச்சல்களை தந்த நிலையில் ராகு கேது பெயர்ச்சி பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
கடகம் ராசிக்காரர்கள் கடந்த சில மாதங்களாக கடும் சிரமத்தை சந்தித்து வந்தீர்கள். அஷ்டம சனி பாதிப்பு மன உளைச்சல்களை தந்த நிலையில் ராகு கேது பெயர்ச்சி பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

கடகம் ராசிக்காரர்கள் கடந்த சில மாதங்களாக கடும் சிரமத்தை சந்தித்து வந்தீர்கள். அஷ்டம சனி பாதிப்பு மன உளைச்சல்களை தந்த நிலையில் ராகு கேது பெயர்ச்சி பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.

சமீபத்திய புகைப்படம்

மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

Nov 22, 2024 04:59 PM

சனி நேரான பாதை.. 30 ஆண்டுகள் கனவு.. இந்த ராசிகள் சூப்பரோ சூப்பர்.. தொட்டுப் பாருங்க தெரியும்!

Nov 22, 2024 04:55 PM

கேது பெயர்ச்சி.. 2025 முதல் இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

Nov 22, 2024 11:41 AM

குரு கொடூர யோகத்தை கொட்டுகிறார்.. சுக்கிரன் தாங்கி பிடித்து தாலாட்டும் ராசிகள்.. இனி பணத்தால் மெத்தை உருவாகும்

Nov 22, 2024 10:07 AM

உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

Nov 22, 2024 10:01 AM

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை.. லட்சுமி தேவி இந்த மூன்று ராசிக்கு கருணை காட்டுவார்.. 2025 ஜாக்பாட் அடிக்க போகுது!

Nov 22, 2024 09:30 AM

மாய சிந்தனையை உருவாக்கும் நிலையை ராகு பகவானும், ஞான சிந்தனையை உருவாக்கும் நிலையை கேது பகவானும் அளிக்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களும் இருக்கும் வீட்டின் உடைய அதிபதியின் பலன்களை தரும் தன்மைகளை பெற்று உள்ளன.

செல்வாக்கு கூடும் காலம்

கடகம் ராசிக்காரர்கள் கடந்த சில மாதங்களாக கடும் சிரமத்தை சந்தித்து வந்தீர்கள். அஷ்டம சனி பாதிப்பு மன உளைச்சல்களை தந்த நிலையில் ராகு கேது பெயர்ச்சி பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். 

2ஆம் இடத்தில் அமர உள்ள கேது பகவானால் அரசு வழியில் நன்மைகளும், அனுகூலங்களும் உண்டாகும். அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். கடன் சார்ந்த பிரச்னைகளில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் பணவரவு கூடும். இட மாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம் உண்டாகும். வேலை கிடைப்பதில் இருந்த பிரச்னைகள் விலகும். பணியிடங்களில் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும். 

காதல் திருமணம் கைக்கூடும்

காதல் திருமணம் கைக்கூடும். திருமணம் சார்ந்த உறவுகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை பெருகும். 8ஆம் இடத்தில் உள்ள ராகு பகவான் அதிக செல்வ வரவை உண்டாக்கி தருவார். இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த சங்கடங்கள் தீரும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் வணிகம் பெருகும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும். வட்டித் தொழில், விவசாயம் செய்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்வீர்கள். நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். சேமிப்பில் ஆர்வம் பிறக்கும். 

திடீர் யோகம் கிடைக்கும்!

வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு விசா கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் செயல்பாடுகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். திருமணம் தவறிய உறவுகளில் இருப்பவர்களுக்கு சிக்கல்கள் உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் ராகு பகவான் வரும் போது திடீர் யோகம் கிடைக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணம் கொட்டும். கேது பகவான் மகம் நட்சத்திரத்தில் செல்லும் போது வாழ்வாதார பிரச்னைகள் விலகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபட்டு வர மாற்றமும், ஏற்றமும் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி