’மிதுன ராசிக்கு 9ஆம் இட ராகுவால் பணம் கொட்டுது! அதிஷ்டம் கிட்டுது!’ ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025
யூகிக்கும் தன்மை அதிகம் கொண்ட மிதுனம் ராசிக்காரர்கள் காலபுருஷனுக்கு 3ஆம் இடம் ஆகும். ஒரு விஷத்தை முன் கூட்டியே யூகித்து செயல்படும் பாக்கிதை இவர்களுக்கு உண்டு. வரவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி வாழ்கையில் திருப்புமுனை தருவதாக இருக்கும்.
18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.
திருப்புமுனை உண்டாகும்
யூகிக்கும் தன்மை அதிகம் கொண்ட மிதுனம் ராசிக்காரர்கள் காலபுருஷனுக்கு 3ஆம் இடம் ஆகும். ஒரு விஷத்தை முன் கூட்டியே யூகித்து செயல்படும் பாக்கிதை இவர்களுக்கு உண்டு. வரவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி வாழ்கையில் திருப்புமுனை தருவதாக இருக்கும்.
ஒரு மனிதனின் பராக்கிரமத்தை 3 மற்றும் 9 ஆம் இடங்கள் வெளிப்படுத்துகின்றன. 3ஆம் இடம் தைரியம், வீரிய ஸ்தானம் ஆகும். இதுவரை 4ஆம் இடத்தில் இருந்த கேது பகவான் 3ஆம் இடத்திற்கு வர உள்ளார். இதனால் உங்களுக்கு முறையான தகவல் தொடர்பு மூலம் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் ஆதாயம் தரும். தலைமை பொறுப்புகள் தேடி வரும். தள்ளி போன பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். திருமண முயற்சிகள் கைக்கூடும். முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் விலகும். அரசு வேலைக்காக காத்து இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆன்மீக சிந்தனை கூடும்
ஆன்மீக சிந்தனைகள் கூடும். அறம் சார்ந்த செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். வீட்டிலும், அலுவகத்திலும் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும்.
வெளியூர் பயணங்களால் ஆதாயம்
அதே சமயம் ராகு பகவான் 9ஆம் இடத்தில் அமர்வதால் தந்தையின் உடல்நலனில் பாதிப்பை உண்டாக்கலாம். அல்லது தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளால் சிக்கல்கள் வரலாம். பூர்வீக சொத்து சார்ந்த விவகாரங்களில் சங்கடம் வரலாம்.
அதே சமயம் புதிய வீடுகள் வாங்கும் யோகம் உண்டாகும். புத்திர பாக்கியம் உண்டாகும். உங்கள் வளர்ச்சிக்கு வெளிநபர்கள் உதவியாக இருப்பார்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்ய வியூகம் வகுப்பீர்கள். இதயம், வயறு சார்ந்த உறுப்புகளில் இருந்து வந்த சிக்கல்கள் சரியாகும். வீட்டில் தன வரவு அதிகரிக்கும். அரசு மற்றும் அரசாங்கம் வழியில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.