Rahu Bhagavan: 1, 5, 9 இல் யாருக்கு ராகு இருந்தாலும் இதுதான் நடக்கும்
Oct 03, 2023, 12:23 PM IST
ராகுவுக்கு சொந்த வீடே இல்லை. அவர்கள் எங்கு இருக்கிறாரோ அதுவே அவரது சொந்த வீடு.
ஜாதகத்தில் ராகு சொல்லும் ரகசியம் என்ன என பார்ப்போம். ராகுவை ஜோதிட சாஸ்திரத்தில் உருவமில்லை என சொல்லப்படுகிறது.
சமீபத்திய புகைப்படம்
அது ஒரு மாயை என சொல்லப்படுகிறது. வலி, வேதனை ஆகியவற்றுக்கு உருவம் இல்லை.
ராகு-கேது ஆகிய இரு கிரகங்களும் வலி, வேதனையைத் தரக் கூடியவர்கள். உணர்வுகளை சொல்லக் கூடியவர்கள் ராகு-கேதுதான்.
ஒருவரின் வாழ்க்கையை புரட்டிப் போடவும் செய்கிறார். உயரத்தில் வைக்கவும் செய்கிறார். ராகு ஒரு பாவி, ராகு கெட்ட கிரகம் என்றெல்லாம் கூறுவார்கள். அப்படியெல்லாம் இல்லை. மற்ற கிரகங்கள் எல்லாம் கெடுதல் செய்தாலும் ராகு ஒருவர் மட்டும் இருந்தால் கூட போதும். உங்களுக்கு தேவையான அனைத்து நல்லதையும் செய்வார்.
உணவை நீங்கள் ரசித்து ருசித்து சாப்பிட கூட ராகுவின் அனுக்கிரகம் வேண்டும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.
ராகுவுக்கு சொந்த வீடே இல்லை. அவர்கள் எங்கு இருக்கிறாரோ அதுவே அவரது சொந்த வீடு.
எந்த கிரகத்துடன் ராகு சேர்ந்து இருக்கிறாரோ அந்த கிரகத்துடன் ராகு சேர்ந்து பணிபுரிய தொடங்கிவிடுவார். ராகுவுக்கு உச்ச வீடு என்று சொன்னால் விருச்சிகம். நீச்ச வீடு என்று சொன்னால் அது ரிஷபம். ராகுவின் நட்சத்திரங்கள் என்றால் திருவாதிரை, ஸ்வாதி ஆகியவை ஆகும்.
திருவாதிரை சிவனுடைய நட்சத்திரம், ஸ்வாதி நரசிம்மரின் நட்சத்திரம். 1, 5, 9 இல் யாருக்கு ராகு இருந்தாலும் அவர்களுக்கு ராகு காலம் நல்லதே. ராகு கொடுத்தால் தடுப்பதற்கு யாருமில்லை. கோச்சாரத்தில் ராகு வரும்போது மனிதனுடைய வாழ்க்கை மாறுகிறது.
வருடத்திற்கு ஒரு முறையாவது திருநாகேஸ்வரம் சென்று வழிபட்டு வந்தால் ராகு கேட்பதை எல்லாம் கொடுப்பார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
பொறுப்புத்துறப்பு- இந்தச் செய்தி பொதுவெளியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. உண்மைத்தன்மையை உரிய நிபுணர்களை அணுகி தெரிந்து கொள்ளுங்கள்.
டாபிக்ஸ்