Rahu Ketu Luck: ராகு கேதுவால் உச்சம் செல்ல போகும் 2 ராசிக்காரர்கள் நீங்களா?
Aug 16, 2023, 12:30 PM IST
ராகு கேது பெயர்ச்சியால் பலன் பெறப்போகும் இரண்டு ராசிகள்.
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இந்த இரண்டு கிரகங்களும் வக்ரப் பெயர்ச்சியாகின்றனர். ஜாதகத்தில் ராகு மற்றும் கேதுவின் நிலை மோசமாக இருந்தால் அந்த ராசிக்காரர்கள் பல்வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
சமீபத்திய புகைப்படம்
தற்போது இந்த இரண்டு ராசிகளும் வக்ர நிலையில் பயணம் மேற்கொள்கின்றனர். ஒன்றரை ஆண்டுகள் ஒரு அரசியல் பயணம் செய்து பல்வேறு விதமான சிக்கல்களை கொடுப்பார்கள் அதனால் இவர்கள் அசுப கிரகங்களாக கருதப்படுகின்றன.
இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் மாற்றம் அடைகின்றனர். இந்த ஆண்டு ராகு மற்றும் கேதுவின் நிலையானது மிகவும் சிறப்பாக உள்ளது. ஒரு அக்டோபர் 30ம் தேதி அன்று இருவரும் பெயர்ச்சி அடைகின்றனர்.
ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பெயர்ச்சி அடைகின்றனர். இவர்களால் குறிப்பிட்ட இரண்டு ராசிகளுக்கு மட்டும் மிகவும் சிறப்பான அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
ரிஷப ராசி
ராகு கேது சஞ்சாரத்தால் உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப் போகின்றது. இதுவரை நீங்கள் சந்தித்து வந்து சிக்கல்கள் அனைத்தும் விலகப் போகின்றது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
நிதி சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். திடீர் பணவரவு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும்.
சிம்ம ராசி
ராகு மற்றும் கேதுவின் சஞ்சாரத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் அழைக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நீங்கள் சந்தித்து வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். பழைய இழப்புகளை ஈடு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பண உதவி, சம்பள உயர்வு உள்ளிட்ட கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்