தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பாம்பாறு இடையில் சிக்கிய மக்கள்.. பாலம் அமைத்த முத்தையா செட்டியார்.. அருள் பாலித்த உமாபதீஸ்வரர்

பாம்பாறு இடையில் சிக்கிய மக்கள்.. பாலம் அமைத்த முத்தையா செட்டியார்.. அருள் பாலித்த உமாபதீஸ்வரர்

Oct 29, 2024, 06:00 AM IST

google News
Umapadeeswarar: சிவபெருமானை குலதெய்வமாக நினைத்து மன்னர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்டம் உமையாள்புரம் அருள்மிகு உமாபதீஸ்வரர் திருக்கோயில்.
Umapadeeswarar: சிவபெருமானை குலதெய்வமாக நினைத்து மன்னர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்டம் உமையாள்புரம் அருள்மிகு உமாபதீஸ்வரர் திருக்கோயில்.

Umapadeeswarar: சிவபெருமானை குலதெய்வமாக நினைத்து மன்னர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்டம் உமையாள்புரம் அருள்மிகு உமாபதீஸ்வரர் திருக்கோயில்.

Umapadeeswarar: உலகம் முழுவதும் மிகப் பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் கோயில் கொண்டிருந்தாலும் குறிப்பாக இந்தியாவில் திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனித உயிரினங்கள் தோன்றியதற்கு முன்னதாகவே சிவபெருமானுக்கு வழிபாடுகள் பல உயிரினங்கள் நடத்தியுள்ளதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

சமீபத்திய புகைப்படம்

மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

Nov 22, 2024 04:59 PM

சனி நேரான பாதை.. 30 ஆண்டுகள் கனவு.. இந்த ராசிகள் சூப்பரோ சூப்பர்.. தொட்டுப் பாருங்க தெரியும்!

Nov 22, 2024 04:55 PM

கேது பெயர்ச்சி.. 2025 முதல் இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

Nov 22, 2024 11:41 AM

குரு கொடூர யோகத்தை கொட்டுகிறார்.. சுக்கிரன் தாங்கி பிடித்து தாலாட்டும் ராசிகள்.. இனி பணத்தால் மெத்தை உருவாகும்

Nov 22, 2024 10:07 AM

உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

Nov 22, 2024 10:01 AM

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை.. லட்சுமி தேவி இந்த மூன்று ராசிக்கு கருணை காட்டுவார்.. 2025 ஜாக்பாட் அடிக்க போகுது!

Nov 22, 2024 09:30 AM

தங்கள் வாழ்க்கையை மனிதர்கள் அர்ப்பணித்து சிவபெருமானை நோக்கியே பலரும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் தெற்கு பகுதியான தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய பிரமாண்ட கோயில்கள் கட்டி வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மண்ணுக்காக மன்னர்கள் ஒருபுறம் போரிட்டு வந்தாலும் சிவபெருமான் மீது கொண்ட மிகப்பெரிய பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே பல மன்னர்கள் மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது. என்று கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த அளவிற்கு பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக வரலாற்று சரித்திர குறியீடாக நின்று வருகிறது. அந்த அளவிற்கு சிவபெருமானை குலதெய்வமாக நினைத்து மன்னர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்டம் உமையாள்புரம் அருள்மிகு உமாபதீஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் உமாபதீஸ்வரர் எனவும் தாயார் மங்களாம்பிகை என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய அம்மனுக்கு செம்பருத்தி மாலை மற்றும் கிரீடம் அணிவித்து வழிபடுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.

கல்வியில் சிறந்து விளங்க, குழந்தை பாக்கியம், செல்வம் பெருக, முக்தி நிலை அடைய இந்த கோயிலில் வந்து வழிபட்டால் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

தல வரலாறு

திருமயம் என்ற ஊரைச் சுற்றி பல கிராம மக்கள் வாழ்ந்து வந்தனர். 1920 ஆம் ஆண்டு வாகன வசதிகள் மிகவும் குறைவாக இருந்தது. அதனால் மாட்டு வண்டிகள் பயன்படுத்தி பாம்பாறு சில கிராம மக்கள் திருமயத்திற்கு வர வேண்டியது இருந்தது. சில நேரங்களில் மாட்டு வண்டிகள் சேற்றில் சிக்கிக்கொண்டு வெளியே செல்ல முடியாமல் கிராம மக்கள் தவித்து வந்துள்ளனர்.

ஈச்சங்காடு என்ற பகுதியில் மறைந்திருந்த திருடர்கள் இந்த தருணத்தை பயன்படுத்திக்கொண்டனர். மாட்டு வண்டியில் சிக்கி அந்த பகுதியில் வந்த மக்களிடமிருந்து திருடர்கள் நகைகள் மற்றும் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர். இது குறித்து திவான் பகதூர் முத்தையா செட்டியாருக்கு தகவல் சென்றுள்ளது. இதனால் பாம்பாற்றின் இடையே சொந்த செலவில் பாலம் ஒன்றை கட்டியுள்ளார்.

மேலும் திருடர்கள் மறைந்து இருந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக அவருடைய தாயாரின் பெயரில் உமையாள்புரம் என்ற ஊரை அங்கே உருவாக்கியுள்ளார். மக்களின் நடமாட்டம் அதிகம் இருந்தால் திருடர்கள் வருவதற்கு பயம் கொள்வார்கள் என அவர் நினைத்துள்ளார்.

அதற்குப் பிறகு அங்கே ஒரு குளத்தை வெட்டி தண்ணீர் பந்தல் அமைத்துள்ளார். மேலும் விநாயகப் பெருமானுக்கு கோயில் ஒன்று அமைக்க வேண்டுமென முடிவு செய்துள்ளார். ஒருமுறை அந்த ஊருக்கு காஞ்சி பெரியவர் வந்துள்ளார். அப்போது முத்தையா செட்டியாரை சந்தித்த அவர் சிவபெருமானுக்கு கோயில் அமைத்து அதில் விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்யுமாறு கேட்டு உள்ளார்.

அங்கு இருந்த விநாயகர் கோயிலில் சிவபெருமான் மற்றும் தாயார் இன் சந்ததிகளை அமைத்து 1929 ஆம் ஆண்டு வழிபாட்டை தொடங்கினார். அந்த வழிபாட்டு முறை இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது. அதுவே நாம் காணும் உமையாள்புரம் அருள்மிகு உமாபதீஸ்வரர் திருக்கோயில் ஆகும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை