வாழ்வில் கட்டாயம் செல்ல வேண்டிய சனீஸ்வர கோவில்கள்! நன்மை தரும் தலங்கள்! இப்போவே கிளம்புங்க!
Oct 29, 2024, 07:41 PM IST
இந்து மத முறைப்படியும் இந்து சாஸ்திரங்களில் எழுதிய படியும் நவகிரகங்கள் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் எதிர்மறை மற்றும் நேர்மறையான விளைவுகளை உருவாக்குகிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பலரும் நவகிரகங்களை நம்பி அதற்காக சில வழிபாடுகளையும் செய்து வருகின்றனர்.
இந்து மத முறைப்படியும் இந்து சாஸ்திரங்களில் எழுதிய படியும் நவகிரகங்கள் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் எதிர்மறை மற்றும் நேர்மறையான விளைவுகளை உருவாக்குகிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பலரும் நவகிரகங்களை நம்பி அதற்காக சில வழிபாடுகளையும் செய்து வருகின்றனர். நவகிரகங்களில் பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய தலைமை கிரகமாக இருப்பவர் சனீஸ்வர பகவான். சனி பார்வை படும் ராசிக்காரர்களுக்கு எப்பொழுதுமே எதிர்மறையான பலன்கள் மட்டுமே கிடைப்பதாகவும், சனீஸ்வர பகவானை நினைத்தாலே மனிதர்கள் அனைவரும் அச்சப்படுவார்கள் என்ற நிலையும் இருந்து வருகிறது.
சமீபத்திய புகைப்படம்
இருப்பினும் சனி கொடுத்தால் எவர் தடுப்பான் என்ற பழமொழியும் உள்ளது. அதாவது சரியான நேரத்தில் சனியின் பார்வை ஒரு குறிப்பிட்ட ராசிக்காரரின் மீது படும்போது அவரது வளர்ச்சியை யாராலும் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என நம்பப்படுகிறது. இந்த நிலையில் சனீஸ்வர பகவானின் அருள் பெற்ற ராசிக்காரர்கள் பலர் வாழ்க்கையில் சாதித்துள்ளனர். மேலும் சனியின் கோரப்பார்வையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், பல வழிமுறைகளை சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் சனீஸ்வர வழிபாட்டு தலங்களுக்கு சென்று சனீஸ்வரரை வழிபட்டு வருவது. அதில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சனீஸ்வர தலங்களையும் அனைவரும் வாழ்க்கையில் கட்டாயம் போக வேண்டிய அவசியத்தையும் குறித்து இந்த பகுதியில் காணலாம்.
குச்சனூர்
சனீஸ்வர பகவான் கோவில் என்றாலே பெரும்பாலானோர் மனதிற்கு நினைவில் வருவது தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் கோவில் தான். ஏனெனில் இந்த குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் உலக அளவில் பிரபலமான ஒன்றாகும். மேலும் இங்கு இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி திருவிழா உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு திருவிழாவாக இருந்து வருகிறது. இந்த புனித தளத்தில் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடை திறந்து இருக்கும். பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும். இந்த கோவிலுக்கு சென்று ஆற்றில் புனித நீராடி சனீஸ்வர பகவானை தரிசித்து வர நம் மீது உள்ள சனீஸ்வர பகவானின் கோர பார்வை சாந்தமாகி நல்ல பலன்களை கொடுக்கும்.
சோழ வந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஒரு சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உருவாகியுள்ள சுயம்பு சனி பகவான் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும் .வாழ்வில் ஏற்படும் தீராத பிரச்சனைகளையும் தொல்லைகளையும் நோய்களையும் தீர்க்க வேண்டி இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும்.
திருநள்ளாறு
சனீஸ்வர பகவானின் புனித தலங்களில் மற்றொரு பிரசித்தி பெற்ற தலமாக பாண்டிச்சேரியில் உள்ள திருநள்ளாறு இருந்து வருகிறது. இந்த திருநள்ளாறு உலக அளவில் சனீஸ்வர பகவானின் அருளிற்க்கு பெயர் போன ஒன்றாகும். பாண்டிச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு அமைந்துள்ளது. இங்கு சென்று அங்குள்ள புனித நீரில் நீராடி வரும்போது ஏழரை சனி உள்ளிட்ட பல பிரச்சனைகள் தீரும் என நம்பப்படுகிறது.
வளீஸ்வரர் கோவில்
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய சனீஸ்வரர் கோவிலாக விழுப்புரம் மாவட்டம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு வளீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்களின் பார்வைக்கு காலை 6:00 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் சனியின் சனி வக்கிர பெயர்ச்சி சனி பெயர்ச்சி போன்ற பேச்சுகளால் துன்பம் வரும் ராசிக்காரர்கள் இந்த கோவிலுக்கு சென்று வணங்கி வர அவர்களது துன்பம் அகலும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து
டாபிக்ஸ்