தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Palm Sunday: குருத்து ஞாயிறு திருநாளில் குருத்தோலை பவனி

Palm Sunday: குருத்து ஞாயிறு திருநாளில் குருத்தோலை பவனி

Apr 02, 2023, 05:45 AM IST

கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்தவ மதத்தினர் ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு  கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி அன்று சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது. இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை குருத்து ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

சூரியனின் பண வெயிலில் காயப் போகும் ராசிகள்.. அக்னியாக கொட்டும் ராஜயோகம்.. வருகிறது அதிர்ஷ்டம்

May 18, 2024 02:06 PM

கண்ணில் கத்தி வீசப்போகும் செவ்வாய்.. கதறி கொட்டும் ராசிகள்.. சிக்கினால் சிதைவது உறுதி

May 18, 2024 10:43 AM

குருவின் ராட்சச படையல்.. டும் டும் டும் கொட்ட போகுது.. பணத்தில் கபடி விளையாட போகும் ராசிகள்

May 18, 2024 10:11 AM

இந்நிலையில் ஏப்ரல் இரண்டாம் தேதியான இன்று அனைத்து தேவாலயங்களிலும் குருத்து ஞாயிறு திருநாள் குருத்தோலை பவனியாக கொண்டாடப்படுகிறது.

வரலாறு

ஜெருசலேம் நகரில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்துவை கோவேறு கழுதையில் ஏற்றி சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து ஒலிவ மரக்கிளைகளைக் கையில் ஏந்தி தாவிது மகனுக்கு ஓசன்னா, ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர் என ஆர்ப்பரித்துக் கூறி பவனி வந்தனர்.

அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்த குருத்தோலை பவனியானது கொண்டாடப்படுகிறது. இந்த குருத்தோலை ஞாயிறு திருப்பலியின் மூலம் புனித வார கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன.

அதனைத் தொடர்ந்து இந்த புனித வாரத்தில் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி அன்று வியாழக்கிழமை புனித வியாழனாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில்தான் இயேசு கிறிஸ்து நற்கருணையை ஏற்படுத்தினார். தன்னிடம் இருந்த 12 சீடர்களின் பாதங்களையும் இயேசு கிறிஸ்து கழுவியதை நினைவு கூறும் வகையில், அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலின் போது பங்குத்தந்தையர்கள் 12 பேரின் பாதங்களைக் கழுவுவார்கள்.

அன்றைய திருப்பலி நிறைவு பெறும்போது திவ்ய நற்கருணை பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வைக்கப்படும். மறுநாள் புனித வெள்ளி திருநாளன்று முழு நாளும் நற்கருணை ஆராதனை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து திருச்சிலுவைக்கு முத்தமிட்டு புனித நிகழ்ச்சியான ஆலயத்தின் இறுதி சிலுவை பாதை நடைபெறும். சனிக்கிழமையான ஏப்ரல் எட்டாம் தேதி அன்று இரவு 11 மணிக்கு திருவிழிப்பு வழிபாடு நடைபெறும்.

அன்றைய தினம் விசுவாசிகள் மன்றாட்டு, நற்கருணை வழிபாடு அனைத்தும் நடைபெறும். இதனைத் தொடர்ந்து உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெறும். அதன் பின்னர் ஏப்ரல் ஒன்பதாம் தேதியான ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படும்.

புனித வெள்ளி திருநாளன்று உலக மக்களுக்காகப் பாவங்களைச் சுமந்து உயிர் விட்ட இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்தெழும் திருநாளே ஈஸ்டர் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி