தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology: அதிர்ஷ்டசாலிகள்! நிதி செழிப்புடன் ராஜ போக வாழ்க்கை வாழும் இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் - எண் கணிதம் கணிப்பு

Numerology: அதிர்ஷ்டசாலிகள்! நிதி செழிப்புடன் ராஜ போக வாழ்க்கை வாழும் இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் - எண் கணிதம் கணிப்பு

Jul 24, 2024, 09:00 PM IST

google News
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டஷாலிகள், நிதி செழிப்புடன் ராஜ போக வாழ்க்கை வாழும் யோகம் உள்ளவர்கள் என எண் கணிதம் கணிப்பு கூறுகிறது. அந்த நபர்கள் யார் என்பதை விவரமாக பார்க்கலாம்.
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டஷாலிகள், நிதி செழிப்புடன் ராஜ போக வாழ்க்கை வாழும் யோகம் உள்ளவர்கள் என எண் கணிதம் கணிப்பு கூறுகிறது. அந்த நபர்கள் யார் என்பதை விவரமாக பார்க்கலாம்.

இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டஷாலிகள், நிதி செழிப்புடன் ராஜ போக வாழ்க்கை வாழும் யோகம் உள்ளவர்கள் என எண் கணிதம் கணிப்பு கூறுகிறது. அந்த நபர்கள் யார் என்பதை விவரமாக பார்க்கலாம்.

எண் கணிதத்தின் படி ஒவ்வொரு எண்களில் பிறந்தவர்களின் பொதுகுணமும், அவர்கள் தங்களது வாழ்க்கையில் அதிகமாக சந்திக்கும் விஷயங்களை பலன்கள் பற்றி விவரிக்கப்படுகிறது. அதன்படி நிதி ரீதியாக அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள் எந்த எண்களில் பிறந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய புகைப்படம்

'தெத்தியடி ஆட்டம் ஆரம்பம்.. அச்சம் வேண்டாம்.. அதிர்ஷ்டம் வரும்.. இன்று நவ. 26 மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள்!

Nov 26, 2024 05:00 AM

'நடப்பது நடக்கட்டும்.. இலக்கில் கவனம்.. எச்சரிக்கை.. திசை மாறினால் தினம் வீணாகும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்!

Nov 25, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

ஜோதிடத்தைப் போலவே, எண் கணிதமும் ஒரு நபரின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கூறுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மனித வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துவது போல், பிறந்த தேதியும் குறிப்படத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொருவரின் பிறந்த தேதியில் இருந்தும் மூல எண் அறியப்படுகிறது. ஜோதிடம் ஒன்பது கிரகங்களையும் வைத்து கணிக்கப்படுவதுபோல், எண் கணிதம் ஒன்பது மூல எண்களையும் வைத்து கணித்து விவரிக்கப்படுகிறது.கிரகங்களின் நிலை மற்றும் இயக்கம் ஒவ்வொரு நபரையும் பாதிக்கிறது. அவை மூல எண்ணுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்

எண் கணிதத்தில், 9 என்ற எண்ணுடன் தொடர்புடையவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், எண் கணிதத்தின்படி நீங்கள் 9 என்ற மூல எண்ணைக் கொண்ட நபர் என்று அழைக்கப்படுவீர்கள்.

உங்களுக்கான மூல எண்ணைக் கண்டறிய இதை செய்யுங்கள். உங்களது பிறந்த தேதியுடன் கூட்டு சேர்க்கப்பட்டால் வெளிவரும் எண் தான் உங்கள் மூல எண்ணாகும். உதாரணமாக, நீங்கள் எந்த மாதத்திலும் 18 ஆம் தேதி பிறந்தால், 1+8=9 வரும்.

அந்த வகையில் 9 என்ற மூல எண் கொண்டவர்கள் தங்களது வாழ்க்கையில் ஏராளமான செல்வத்தையும், புகழையும் சம்பாதிக்கிறார்கள்: எண் 9ஐ கொண்டவர்கள் புத்திசாலிகள் என்று எண் கணிதம் கூறுகிறது.

எண் கணிதம் 9 குணநலன்கள்

இவர்கள் ஒருமுறை எடுக்கும் முடிவில் இருந்து பின்வாங்குவது அரிது. வாழ்க்கையில் தாங்கள் அடைய நினைத்ததை அடையும் வரை ஓய மாட்டார்கள். இவர்கள் பொதுவாக உயர் பதவிகளை வகிக்கிறார்கள். 9ம் எண் கொண்டவர்கள் செல்வம் சம்பாதிப்பதில் வல்லவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படுவது அரிது. எனவே தங்களது வாழ்க்கையில் நித

ராஜாவைப் போல வாழ்வார்கள்

9ஆம் எண் கொண்டவர்கள் வசதிகள் மற்றும் ஆடம்பரங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். இவர்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவர்களாக இருப்பார்கள். தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக பணத்தை செலவிட எவ்வித தயக்கமும் காட்ட மாட்டார்கள்.

எண் கணிதத்தின் படி, எண் 9 உள்ளவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள், அவர்கள் யாருடைய தலையீட்டையும் விரும்ப மாட்டார்கள். சுருக்கமாக தங்களது வாழ்க்கை ராஜாவை போல் வாழும் குணநலம் கொண்டவராக இருப்பார்கள் என எண் கணிதத்தில் கூறப்படுகிறது.

பொறுப்புதுறப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி