கோபம் கொண்டு பறந்த முருக பெருமான்.. தடுத்து நிறுத்திய பார்வதி தேவி.. காட்சி கொடுத்த அசலதீபேஸ்வரர்
Oct 25, 2024, 06:00 AM IST
Asaladeepeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் அசலதீபேஸ்வரர் எனவும் தாயார் மதுகரவேணியம்பிகை எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Asaladeepeswarar: இந்தியாவில் சிவபெருமானுக்கான தனித்துவமான பக்தர்கள் இருந்து வருகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக சிவபெருமானுக்கு தங்கள் வாழ்க்கையில் அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ சித்தர்கள், முனிவர்கள் இந்த பூமியில் வாழ்ந்து வந்துள்ளன.
சமீபத்திய புகைப்படம்
பல காலங்கள் கடந்தும் இன்று வரை பல சிவபெருமான் கோயில்களில் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை சிவபெருமான் தன் வசம் வைத்திருக்கிறார்.
எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்றும் காசி விஸ்வநாதர் கோயிலில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து அகோரிகளாக சிவபெருமானின் பலரும் வணங்கி வருகின்றனர்.
மண்ணுக்காக மன்னர்கள் ஒரு பக்கம் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே அந்த காலத்தில் மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை மிகப்பெரிய செலவில் கட்டி வைத்துச் சென்றுள்ளனர்.
சிவபெருமானின் சோழர்கள், பாண்டியர்கள் என அனைத்து மன்னர்களும் குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். மிகப்பெரிய சோழ மன்னனாக விளங்கிய ராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டி வைத்துச் சென்றுள்ளார்.
இன்று வரை உலகத்தின் வியப்பின் சரித்திர குறியீடாக அந்த திருக்கோயில் திகழ்ந்து வருகிறது. இதுபோல தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய கோயில்களை மன்னர்கள் கட்டி வைத்து சென்றுள்ளன. சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் அசலதீபேஸ்வரர் எனவும் தாயார் மதுகரவேணியம்பிகை எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா இந்த திருக்கோயிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. உங்க வீட்டில இருக்கக்கூடிய சிவபெருமான் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி கொடுத்து வருகிறார் பார்வதி தேவியான அம்பிகை கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
தன் மகனை அழைப்பதற்காக அம்பிகை இந்த இடத்தில் நின்ற ஊர் என்பதால் இது மகனூர் என அழைக்கப்பட்டது. அதற்குப் பிறகு இது மோகனூர் என மருவி உள்ளது. தாய் அழைத்து சற்று தூரத்தில் முருக பெருமான் நின்ற காரணத்தினால் இந்த இடத்தில் இருக்கும் குன்றின் மீது முருகப்பெருமானுக்கு தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
காவிரி நீரில் வழிபட்டு விட்டு உங்க வீச்சருக்கக்கூடிய சுவாமியை வழிபட்டால் முன் ஜென்மத்தில் செய்த பாவம் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த திருக்கோயில் தேவார வைப்புதலமாக திகழ்ந்து வருகிறது.
தல வரலாறு
கைலாயத்தில் நாரதர் முனி கொடுத்த ஞானப்பழத்தை சிவபெருமாள் விநாயகரிடம் கொடுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட முருக பெருமான் தென்தி செய்ய நோக்கி கோபத்தில் கிளம்பிவிட்டார். சிவபெருமான் மற்றும் அம்பிகை இருவரும் முருக பெருமானை சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை.
பார்வதி தேவி முருகப்பெருமானை தொடர்ந்து சென்றார். சிவபெருமானும் அவருடன் சேர்ந்து சென்றார். மயில் வாகனத்தில் முருக பெருமான் சென்று கொண்டிருந்த வேளையில் பார்வதி தேவி அவரை நிற்கும்படி கூறினார். தாயின் குரலை கேட்ட முருக பெருமான் அந்த இடத்தில் சற்று நின்றார்.
அதன் பின்னர் முருகப்பெருமானை கைலாயம் திரும்பி வரும்படி பார்வதி தேவி கூறினார். முருகப்பெருமான் நான் தனியே இருக்க விரும்புவதாக கூறிவிட்டு பழனிக்கு சென்று விட்டார். பார்வதி தேவி அழைத்த பொழுது முருகப்பெருமான் நின்ற திருக்கோயில் தான் தற்போது கோய்ந்து இருக்கக்கூடிய இடம். இந்த இடத்தில் சிவபெருமான் சுயம்புலி விதமாக காட்சி கொடுத்துள்ளார். அவரே தற்போது அசலதீபேஸ்வரராக காட்சி கொடுத்து வருகிறார்.