Meenam : மீனம் ராசிக்கு முருகப்பெருமான் எழுதிய விதி இதுதான்.. சாதகமாகும் கிரகநிலை.. உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம்!
Meenam : உங்கள் வாழ்வில் இருந்து வரும் சில பிரச்சனைகள், தடங்கல்கள், போன்றவை ஒவ்வொரு ஆண்டின் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நிச்சயம் முடிவுக்கு வரும். பொருளதார நிலை குரு பகவான், சனிபகவான் கருணையால் உயர்ந்த நிலைக்கு செல்லும். பொதுக்காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
Meenam : மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை கிரக நிலைகளின் அடிப்படையில் குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் உள்ளார். ராகு பகவான் தன வாக்கு ஸ்தானத்தில் உள்ளார். சனி பகவான் சப்தம ஸ்தானத்திலும், கேது பகவான் அஷ்ட ஸ்தானத்திலும் உள்ளனர். இதனால் மீனராசிக்காரர்களுக்கு மிகப் பெரிய மாற்றங்கள், ஏற்றங்கள், சந்தோஷங்கள் உண்டாகும் என்பதே முருகப்பெருமானின் விதியாக உள்ளது. அனைத்து விஷயங்களிலும் இருந்து வந்த தொய்வு மாறி விடும். பொதுவாக உங்கள் வாழ்வில் இருந்து வரும் சில பிரச்சனைகள், தடங்கல்கள், போன்றவை ஒவ்வொரு ஆண்டின் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நிச்சயம் முடிவுக்கு வரும். பொருளதார நிலை குரு பகவான், சனிபகவான் கருணையால் உயர்ந்த நிலைக்கு செல்லும். பொதுக்காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடை பட்டவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குழந்தை இல்லாமல் அவதிப்பட்டு ஏக்கத்தில் உள்ளவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் அதற்கான நல்ல செய்தி வந்து சேரும். தனித்து நின்று போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். பல கடினமான காரியங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க ராகு பகவான் அருள் புரிவார்.
உழைப்புக்கு ஏற்ற பலன்
பொதுவாக உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். மீன ராசியினர் பொதுவாக புதிய திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடுகளை சிறப்பாக செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு அதிகம் செலவு செய்வீர்கள்.
மீனம் ராசியில் பிறந்த உங்களுக்கு முருகப்பெருமானின் விதியின் படி நீங்கள் ஒற்றுமையாக குடும்பத்தினரோடு இருப்பீர்கள் குடும்பத்தினரின் எந்த ஒரு விஷயங்களையும் அனுசரித்து அமைதியாக செல்லக்கூடியவர்களாக இருப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பீர்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துபவர்களாக இருப்பீர்கள்.
ஆடை ஆபரண சேர்க்கை நிச்சயம் உங்களுக்கு அதிகரிக்கும் நீங்கள் ஒரு உத்தியோகஸ்தாராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதமும் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். உங்கள் கடின உழைப்பை தாரக மந்திரமாக பயன்படுத்தி அந்த மாதத்தில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதாக பெறலாம். உங்கள் உடல் உழைப்புக்கு மேல் இரு மடங்கு வருமானத்தை நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் காண்பீர்கள்.
பலன் தரும் பயணங்கள்
ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் பலன் தரும் வகையில் அமையும். மார்ச் ஏப்ரல் மாதங்களில் நீங்கள் செய்யக்கூடிய பயணங்கள் உங்கள் லாபத்தை அதிகரிக்கும். வியாபாரிகளை பொருத்தமட்டில் கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றபடி சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்க கூடிய வேலையை உங்களுடைய பாவம் புண்ணியங்களை பொறுத்து கேது பகவானும் ராகு பகவானும் பார்த்துக் கொள்வார்கள்.
புதிய வியாபார நோக்கங்களை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் சிறப்பாக செயல்படக்கூடிய வல்லமையை உங்களுக்கு சூரிய பகவான் கொடுப்பார் என்பதே முருகப்பெருமானின் விதி. அரசியல் ரீதியாக நீங்கள் இருந்தீர்கள் என்றால் சங்கடங்கள் அனைத்தும் குறையும். எதிர்க்கட்சியினர் உங்களைப் பற்றி குறை சொல்வது குறைப்பர். தொண்டர்கள் உங்கள் பெருமைகளை புரிந்து கொள்வர். யாரையும் குறைத்து மதிப்பிடாமல் செயல்படுவது உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.
மாணவர்களை பொருத்தமட்டில் புத்திசாலியாக செயல்படுபவர்களாக மீன ராசியினர் இருப்பர். இதனால் அதிக மதிப்பெண்களை நிச்சயம் பெறுவீர்கள் போட்டிகளில் பங்கேற்று பாராட்டை பெறுபவர்கள் ஆகவும் இருப்பீர்கள் உடல் பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்போடு காணப்படுபவர்கள் தான் மீன ராசியினர்,
சாதகமாகும் கிரக நிலை
பொதுவாக கிரக நிலைகளும், கிரக மாற்றங்களும் மீன ராசியினருக்கு வாழ்க்கையில் பல நேரங்களில் சாதகமாகவே இருக்கும். சில நேரங்களில் கிரகங்களின் நிலை சாதகமாக இல்லாத போது மீன ராசி பிறந்தவர்கள் பெரிய பாதிப்புகளை எதிர் கொள்ள மாட்டார்கள். மற்ற ராசிக்காரர்களை விட திறமையானவர்களாக வல்லவர்களாக இருக்கக்கூடியவர்களை மீனம் ராசியினர் என்பது நம்பிக்கை
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்