75th Independence day: நல்கொண்டா காந்தி கோயிலில் குவியும் மக்கள்!
Aug 15, 2022, 02:31 PM IST
நல்கொண்டா மகாத்மா காந்தி கோயிலுக்கு மக்களின் வருகை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. பல நிறுவனங்கள் சுதந்திர தினத்திற்காகப் பல சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தெலங்கானா நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள காந்தி கோயிலுக்குப் பொதுமக்களின் வருகை அதிகமாக உள்ளது.
சமீபத்திய புகைப்படம்
தெலங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் பெத்தகாப்பார்த்தி என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் நான்கு ஏக்கர் நிலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு மகாத்மா காந்திக்கு கோயில் ஒன்று கட்டப்பட்டது.
இன்று(ஆகஸ்ட் 15) 75 ஆம் ஆண்டு சுதந்திர தினம் என்பதால் கோவிலுக்கு வருவோரின் எண்ணிக்கையை அதிகமாக இருக்கிறது. இக்கோயிலில் மகாத்மா காந்தி அறக்கட்டளை பராமரித்து வருகிறது.
இதுகுறித்து அறக்கட்டளையின் செயலர் பி வி கிருஷ்ணகுமார் கூறுகையில், வழக்கமாக இந்த கோயிலுக்கு அதிகபட்சமாக 70 பேர் வருவார்கள். தற்போது 75 ஆம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற காரணத்தினால் தற்போது 350க்கும் மேற்பட்டோர் இங்கு வருகை புரிகின்றனர்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி மட்டுமே இக்கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். சுதந்திர தினமாக இருந்தாலும் சரி மற்ற நாட்களில் எந்த சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறாது.
காந்தியைச் சுதந்திரத்திற்காகப் போராடியவர் என்பதை விட நாங்கள் அவரை தெய்வமாகப் பார்க்கிறோம் அதன் காரணமாக இங்குச் சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை" எனத் தெரிவித்தார்
டாபிக்ஸ்