தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Murugan: அச்சரப்பாக்கம் பக்கத்துல இப்படியொரு முருகன் கோயில் இருக்கா?

Lord Murugan: அச்சரப்பாக்கம் பக்கத்துல இப்படியொரு முருகன் கோயில் இருக்கா?

Manigandan K T HT Tamil

Oct 01, 2023, 06:15 AM IST

google News
Nadupalani: பாறைக் கற்கள், செடி, கொடிகள், புதர்கள் மற்ற இடையூறுகள் களையப்பட்டு, சீர் செய்த பின்பு, சிறிய கொட்டகை அமைத்து, அதில் முருகர் சிலை வைத்து வழிபாடு தொடங்கப்பட்டது. (@eeyessor)
Nadupalani: பாறைக் கற்கள், செடி, கொடிகள், புதர்கள் மற்ற இடையூறுகள் களையப்பட்டு, சீர் செய்த பின்பு, சிறிய கொட்டகை அமைத்து, அதில் முருகர் சிலை வைத்து வழிபாடு தொடங்கப்பட்டது.

Nadupalani: பாறைக் கற்கள், செடி, கொடிகள், புதர்கள் மற்ற இடையூறுகள் களையப்பட்டு, சீர் செய்த பின்பு, சிறிய கொட்டகை அமைத்து, அதில் முருகர் சிலை வைத்து வழிபாடு தொடங்கப்பட்டது.

"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலாதார்" செய்வதற்கு அரிய பெருமை தரும் நல்ல செயல்களை நிறைவேற்றுபவர் பெரியவர் என்று பாராட்டப்படுவார். சிறுமையான செயல்களை மட்டுமே செய்து நற்பணி புரியாதவர் சிறியவர். இது வள்ளுவர் வாக்கு.

சமீபத்திய புகைப்படம்

நாளை முதல்ஆட்டம் போட காத்திருக்கும் சூரியன்.. ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினரே ஜாக்பாட்தான் போங்க!

Nov 15, 2024 07:58 PM

புத்தாண்டில் மாறும் கிரகங்கள்! 2025ஆம் ஆண்டு கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்! செம அடி வாங்க போகும் 3 ராசிகள்!

Nov 15, 2024 05:35 PM

புதன் பெயர்ச்சி உச்சம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. இனி தவிர்க்க முடியாது..!

Nov 15, 2024 03:05 PM

அதிர்ஷ்ட கதவு திறந்தது.. சூரியன் தட்டி தூக்கிய ராசிகள்.. அக்டோபர் பண விளையாட்டு.. தவிக்கப் போவது யார்?

Nov 15, 2024 02:55 PM

சனி தலையில் கை வைத்தார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. 2025 வரை பணமழை.. என்ன நடக்கும்!

Nov 15, 2024 02:48 PM

சனி சதய நட்சத்திர பெயர்ச்சி.. இனி விட முடியாத ராசிகள்.. சொர்க்கம் பூமியில் வருகிறது..!

Nov 15, 2024 10:06 AM

முருகப் பெருமானிடம் பேரன்பும், சிறந்த பக்தியும் கொண்டு, அனுதினமும் அவரை சரணடைந்து, போற்றி வந்த, பொள்ளாச்சியை சேர்ந்த ஐயா முத்துசுவாமி என்பவர், மிராசுதார். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, வட இந்திய யாத்திரையில் பல்வேறு தலங்களுக்கும் சென்று, கண்ணுக்கினிய இறைவனை தரிசனம் செய்து, யாத்திரை முடிந்து, அச்சரப்பாக்கம் அருகே அமைந்துள்ள பெரும்பேர் கண்டிகை எனும் திருத்தலம் வந்து, சுமார் 4 ஆண்டுகள் தவமிருந்து, உலக நலம் பேணினார்.

அப்படியான ஒரு நாளில், அவரது கனவில், முருகப் பெருமான் , அழகிய குழந்தை வடிவத்தில் தோன்றி, புண்ணிய தலம், பெருங்கருணையில உள்ள மலையில், தான், கோவில் கொண்டு, அருள உத்தேசித்திருப்பதை உணர்த்த, அதன்படி, பெரும் கருணையில், உள்ள மலையை, கண்டுபிடித்தார். அதன் உச்சியில், வேலாயுதத்தை நிறுவி, வழிபாடு செய்யத் தொடங்கினார்.

பாறைக் கற்கள், செடி, கொடிகள், புதர்கள் மற்ற இடையூறுகள் களையப்பட்டு, சீர் செய்த பின்பு, சிறிய கொட்டகை அமைத்து, அதில் முருகர் சிலை வைத்து வழிபாடு தொடங்கப்பட்டது. "சொல்லுதல் யார்க்கும் எளிய.." என்பது போல, அதைச் செய்து முடிக்க, அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்ச மல்ல என்பர். இவரது உறுதியும், உத்வேகமும், அங்குள்ள மக்களை கவர்ந் திழுக்க,அவர்களும் இந்த நற்பணிக்குத் தம்மாலான செயல்களைச் செய்து, மிக உறுதுணையாக இருந்தனர்.

ஒரு நாள் பெரிய மழை, காற்றுடன் சேர்ந்து பெய்ய,கொட்டகை சரிந்து விழுந்தது. தனி ஒரு ஆலையம் எழுப்பும் திட்டம் அப்போதுதான் உருவானது மலையை மீண்டும் சீரமைத்தே அத்தகைய பெரும் சவாலான பணியினைச் செய்ய முடியும். ஐயா முத்து சுவாமி சித்தர் பெரும் பாடுபட்டிருக்க வேண்டும். மேலும் எவரிடமும், கையேந்தி, நன்கொடை வாங்காது, அருகிலுள்ள ஊர்களுக்கு, காவடி எடுத்து, அரிசி மற்ற சாமான்களைப் பெற்று, மலை சீரமைப்புப் பணியிலுள்ளோர்க்கு பசி போக்கி, 50 ஆண்டு கடின உழைப்பில் உருவானது நடுபழனி திருக்கோவில்.

மஹான் காஞ்சிப் பெரியவர் ஒருமுறை இங்கு வரும்போது, ஆலயத்தில் முருகப் பெருமான், சாட்சாத் பழனியிலுள்ள தண்டாயுதபாணியாகவே காட்சி கொடுக்க, இத்தலத்தை "நடு பழனி" என்ற நாமகரணமிட்டு அழைத்தார். மேலும் மூலவர் சிலையை, மரகத சிலையாக வடித்து எடுத்து அங்கு, புத்தம் புதிய ஸ்ரீ தண்டாயுதபாணி, 1993 ஆம் ஆண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தண்டாயுதபாணி என அழைக்கப்படும் முருகப் பெருமான் தனது அனைத்து அழகுகளையும் துறந்து, தண்டத்தை அதாவது அடியவர்களை, மட்டுமே, தன் ஒரே சொத்தாகக் கொண்டு வாழ்ந்ததால்தான் அவர் தண்டாயுதபாணி என அழைக்கப்பட்டார் என்பர்‌.

இப்படிப்பட்ட முருகப் பெருமானின் பேரருளைப் பெற்ற ஐயா முத்துசுவாமி சித்தர், பல சித்து விளையாட்டுகளை, பொது மக்களின் நன்மைக்காக மட்டுமே செய்வார்‌. இவர் தரும் விபூதி, பற்பல வியாதிகளைக் குணப்படுத்தும் என இங்கு பரவலாகச் கூறுவர். கூடு விட்டு கூடு பாயும் வல்லமையும் இவருக்கு உண்டு என சொல்கின்றனர்.

சித்தர்களுக்கு, தனது காலம் முடியப் போகிறது எனத் தெரிந்துவிடும் என்பதற்கு, பல உதாரணங்கள் உண்டு ஐயா முத்துசாமி சித்தருக்கும், அது தோன்ற, உடன் தனது கடமைகளை சரிவர செய்யத் தகுந்தவர், என யோசிக்க, மைசூர் ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் உருவம், மனக்கண் முன் வந்தது.

உருவம் வந்தது மட்டுமல்ல ஐயா கணபதி சச்சிதானந்த சுவாமிகளும் சில காலங்களில் நடுபழனி வந்து, தனக்கும் அதே போன்ற கனவு வந்தது எனக்கூறி, மனது பூரிப்படைந்தனர்‌. பின் வேலைகள் துரிதமாக நடந்தேற, பசுமையான இப் பெருங்கரணையில், நமக்கு அற்புதமான இந்த அருமையான, அழகு ஆலயம் கிடைத்தது.

காஞ்சீபுரம் செய்யாறு தாலுக்கா பெருங்கரணை கிராம, சிறுமலையான, 10 அழகிய ஆலமரத்திற்கு இடையேயான கனகமலை எனும் நடுபழனி மேற்கு அடிவாரத்தில், 45 அடி உயரத்தில், அற்புதமான முருகர், காணத் திகட்டாத காட்சி அது!

மலேசியா பத்துமலை முருகனைப் போலவே வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. இதனை மைசூர் ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் இளய மடாதிபதி ஸ்ரீதத்தா விஜயாநந்த தீர்த்த சுவாமிகள் ஆகியோர் பெருந்திரளான பொது ஜனங்கள் முன்பு, அவதூத தத்த பீடத்தின் முயற்சியால் செய்து மக்களுக்கு அர்ப்பணித்து முடித்து,கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது‌.

சிலை படிகளுக்கு கீழே புனிதமான ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி பாதங்கள் மிகச் சிறப்பாக நிறுவப்பட்டு, அழகுடன் காட்சி தருகிறது‌. மேலும், இதனருகே மேற்கு பக்கமான மலை 300 ஆடி உயரம். இதில் ஏறுவதற்கு, 128 வசதியான படிகள், வாகனங்கள் மேலே செல்வதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

படிகள் ஏறுவோர், முதலில் இடும்பன் சுவாமி சன்னதி, எதிரில் ஸ்ரீ ஆஞ்சனேயர் சன்னதி காணலாம். சில படிகள் ஏற ஆலயம் வரும். கணபதி, தத்தாத்ரேயர், சன்னதிகள், நடுநாயகமாக மரகதக் கல்லாலான ஸ்ரீ தண்டாயுதபாணி, கண் கவரும் வெள்ளி மயில் தோகை பின்புலத்தில் விரித்திருக்க,கிழக்கு நோக்கி அருள்மழை பொழிகிறார்.

ஆலய மஹா மண்டபத்தின் இடது புறத்தில், வள்ளி - தெய்வானை சமேதராய் ஷண்முகம் பெருமான். வலது புறம் விநாயகர், பிரம்மா. இது தவிர ருத்ரன் வடிவமான தத்ராத்ரேயர், லக்ஷ்மி, நாக தத்ராத்ரேயர சரஸ்வதி, பார்வதி வடிவமான அனகாலக்ஷ்மி, சிலா படிவங்களைக் காணலாம்.‌ வேம்பு மரத்தடி நாகப்பிரதிஷ்டையும், சரவணப் பொய்கை எனும் நீருற்றும் உள்ளது. இடது புறம் ருத்ராக்ஷ மண்டபம். இதில்தான் வள்ளி-தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி, மயிலின் மீதமர்ந்து தரிசனம் தருகிறார். அறுபடை வீடுகளின் புடைப்புச் சிற்பங்கள் அழகுடன் காணப்படுகிறது‌. 45அடி உயர் சிலையை வடித்தவர் மச்சிலிப் பட்டிணத்தைச் சார்ந்த, பாரம்பர்ய கோவில் சிற்பக் கலைஞர் திரு. வெங்கடேஷ் வர்லு என்பவரெனத் தெரிகிறது.

திருமணங்கள் விரைவில் தடையேதும் இல்லாது நடக்கவும், மணப் பேறு-மக்கட்பேறு பெறவும், ஏனைய விருப்பங்கள் நிறைவேறவும் வேண்டிக் கொள்கின்றனர். தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமை விரதமிருந்து வழிபடுபவர் பலன் கிடைத்ததாகக் கூறுகின்றனர்‌. இங்கு பங்குனி உத்திரம், சஷ்டி, திருக்கல்யாணம், கார்த்திகை தீபம், அன்று ஸ்ரீ முத்துசுவாமி சித்தர் குருூஜை அனுஷ்டிக்கப்படும்.

பாத யாத்திரையாகவும் வருகிறார்கள். விழாக் காலங்கள் களைகட்டும் என்கிறார்கள். இத்தலச் சிறப்பு ருத்ராட்ச காவடி என்பர்‌‌, விரிவாக்கம் செய்யப்பட்ட அழகிய குளம் உள்ளது. விழாக் காலங்களில் அன்னதானம் உண்டு. பவுர்ணமி கிரி வலம் நடப்பதாகக் கூறுவர். விழாக்களில் ஏகதசருத்ரம் மற்றும் திருப்புகழ் பாராயணத்துடன் வேல்காவடி வழிபாடு நடக்கும் என்கின்றனர்.

மலை உச்சியில், ஆலயம் அருகில், இத்தகைய அருட் கோவில் உருவாகக் காரணமாயிருந்த, ஐயா முத்துசுவாமி சித்தரின், ஜீவ சமாதி மண்டபம் உள்ளது‌. மலை அடிவாரம், கணபதி, அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள் ஆகியோர் திரு உருவங்கள் உண்டு. ராஜேஸ்வரி அம்மன், நவ கிரகங்கள் சன்னதி ஆகியனவும் உண்டு. அடிவாரத்தில் சுவாமிகளின் நெருங்கிய நண்பர் முறப்பாக்கம் சுவாமிகளின் சமாதியும் காணப்படுகிறது‌.

அடக்கம் என்னும் நற்பண்பு என்றும் அழியாது, புகழ் நிலைக்கு கொண்டு சேர்க்கும். காலம் அறிந்து, உலக மக்கள் நன்கு வாழ, வான்மழை பொழிகிறது‌. அதற்கு இவ்வுலகம் எந்த மாற்றுதல் இயலும் செய்வதில்லை. மழை பொழியும் மேகத்தைப் போன்றவர் உலக நலன் கருதும் ஒரு ஒப்புரவாளர்‌. அவர்கள் எதிர் உதவி எதையும் எதிர்பாராது உதவுகின்றனர். தகுந்த காலத்தையும், உரிய இடத்தையும், நன்றாக ஆய்ந்து, தெளிந்து, திட்ட மிட்டு, விவரமாகச் செயலாற்றுவோருக்கு இவ்வுலகம் முழுமையாகக் கை கூடும்‌.

"மற்றவர்களின் தெய்வீக இயல்புகளை வெளிப்படுத்தி உதவுவதுதான், நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப் படுத்துவதற்கான ஒரே வழி" என்பது சுவாமி விவேகானந்தரின் வாக்கு. அதன்படி ஸ்ரீ தண்டாயுத பாணி திருக்கோவில் இங்கு அமைய, அரும் பாடு பட்ட, சித்தர் பெருமானுக்கும், அவருக்கு உதவியாக இருந்து பாடுபட்ட அனைவருக்கும், நமது ஆத்மார்த்தமான நன்றிகளை தெரிவித்து, முருகனின் அருளை வேண்டி நிற்போம்.

புராணப் பின்னனி எதுவும் இல்லாத நிலையிலும், மக்களின் மனதில் முழுதும் நிறைந்து, ஆர்ப்பாட்டம் இல்லாத அழகிய, அமைதி தவழும் ஒரு அற்புதமான ஆலய தரிசனமாகத்தான் அங்கு செல்வோருக்கு அமையும். அர்ச்சகரும் அருமையாக பூஜை செய்து பின்னர் ஆலயம் தோன்றிய வரலாற்றை எடுத்துக் கூறினார்.

"சரவண பவனே

சையொளி பவனே

திரிபுர பவனே

திகழொளி பவனே

பரிபுர பவனே

பழமொழி பவனே

அரிதிரு மருகா...

முருகா - சரணம்"

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார்,

சென்னை.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை