தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Career Horoscope: ’பணம் கொட்ட மிதுன ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்’

Career Horoscope: ’பணம் கொட்ட மிதுன ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்’

Kathiravan V HT Tamil

Feb 08, 2024, 07:56 AM IST

google News
”Career Horoscope: மாற்றத்தை விரும்பும் தன்மை கொண்ட இவர்களுக்கு புதிய விஷயங்களை செய்வதில் ஆர்வம் நிறைந்து இருக்கும்”
”Career Horoscope: மாற்றத்தை விரும்பும் தன்மை கொண்ட இவர்களுக்கு புதிய விஷயங்களை செய்வதில் ஆர்வம் நிறைந்து இருக்கும்”

”Career Horoscope: மாற்றத்தை விரும்பும் தன்மை கொண்ட இவர்களுக்கு புதிய விஷயங்களை செய்வதில் ஆர்வம் நிறைந்து இருக்கும்”

புதன் பகவானின் ஆதிக்கம் பெற்ற மிதுனம் ராசிக்காரர்கள், புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு, திறமை, சமூகத்திறன், தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றை நிரம்ப பெற்றவர்கள். 

சமீபத்திய புகைப்படம்

வெற்றியை முத்தமிட்டே தீரும் துணிச்சல் கொண்ட ராசி எது தெரியுமா.. தோல்வி கண்டு நடுங்காத துணிச்சலான ராசிகள் இதோ!

Dec 25, 2024 10:12 AM

சனிபகவான் மனசு வச்சுட்டார்.. அதிர்ஷ்டத்தில் குளிக்க காத்திருக்கும் 4 ராசிகள் எது தெரியுமா.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Dec 25, 2024 09:26 AM

2025 முதல் சனி இந்த ராசிகளுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார்.. இவர்களுக்கு அனைத்து வகையான யோகங்களும் கிடைக்கும்!

Dec 25, 2024 06:45 AM

'வெற்றி நங்கூரமிட காத்திருக்கும் ராசிக்காரர்களா நீங்கள்' இன்று டிச. 25 மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

Dec 25, 2024 05:00 AM

குரு பொங்கல் வைத்து பொட்டு வைப்பார்.. சிக்கிக்கொண்ட 3 ராசிகள்.. வக்கிர நிலையில் ராஜ வாழ்க்கை

Dec 24, 2024 05:46 PM

மாடிகளில் கோடிகளை சேர்க்கும் 3 ராசிகள்.. மகிழ்ச்சியில் புண்ணாக்கும் கேது.. இனி நீங்க தான் கெத்து!

Dec 24, 2024 04:40 PM

விவேகம், சாதூர்யம், அறச்செயல் உள்ளிட்ட குணங்களை கொண்டுள்ள மிதுன ராசிக்காரர்கள் ஆத்ம திருப்திக்காக வாழநினைப்பவர்களாக இருப்பார்கள். 

அன்பு செலுத்தியவர்களுக்காக எதையும் செய்யும் எண்ணம் கொண்ட மிதுன ராசிக்கார்கள் மற்றவர்கள் உடன் ஏற்படும் பிரச்னையை சாதூர்யமாக பேசி விரைவில் சரி செய்துவிடும் திறமையை கொண்டவர்கள். 

மிதுன ராசிக்காரர்களுக்கு 7ஆவது இடமாக உள்ள பாதக ஸ்தானத்தில் 10ஆம் இடத்திற்கு உரிய குரு பகவான் பாதகாதிபதியாக வருவார். எனவே பணம் புழங்கும் தொழிலான ஆன்மீகம், நிதித்துறை, நீதித்துறை உள்ளிட்ட அதிகார தொழில்களில் இருக்கும் போது குறுக்கு வழிகளில் செல்ல நினைத்தால் பெரும் பாதிப்பு ஏற்படலாம்.

பேச்சாளர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட துறைகளில் மிதுனராசியினர் சிறந்து விளங்குவார்கள்.

புத்திசாலித்தனம் நிரம்ப பெற்ற மிதுன ராசிக்காரர்கள் நல்ல பேச்சாளர்களாக இருப்பர்.   சமூக விரும்பிகளாக இருக்கும் இவர்கள், எளிதில் நண்பர்களுடன் பழகுபவர்ககள். 

மாற்றத்தை விரும்பும் தன்மை கொண்ட இவர்களுக்கு புதிய விஷயங்களை செய்வதில் ஆர்வம் நிறைந்து இருக்கும். 

புதன் கல்விக்கு அதிபதியாக விளங்குவதால் மிதுனம் ராசிக்காரர்கள் பட்டய கணக்காளர் படிப்பை தேர்வு செய்வது தொழிலில் மேன்மையை தரும். 

செவ்வாயின் அம்சம் ஜாதகத்தில் இருந்தால் மயக்கவியல் மருத்துவராக ஆகக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது. மிதுன ராசி ஆண்கள் பல் தொடர்புடைய மருத்துவராக ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

எழுத்தாளர், பேச்சாளர், விற்பனையாளர், ஆசிரியர்ம் வழக்கறிஞர், தொழில்நுட்ப வல்லுநர் போன்ற தொழில்களிலும் இவர்களால் சிறந்து விளங்க முடியும். 

அடுத்த செய்தி