Amavasai Dhanam: மஹாளய அமாவாசையில் முன்னோர்கள் ஆசியை முழுமையாக பெற செய்ய வேண்டிய தானங்கள் இதுதான்!
Sep 30, 2024, 04:30 PM IST
மகாளய பட்சம் காலம் தொடங்கி புரட்டாசி அமாவாசை வரை 15 நாட்களும் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்பணம் செய்தால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த 14 நாட்கள் கூட எள்ளும், தண்ணீரும் இறைக்காதவர்கள் 15ஆவது நாளான அமாவாசை அன்று தர்பணம் செய்வது சிறப்பை தரும்.
ஓர் ஆண்டில் மாதம் தோறும் அமாவாசை வருகின்றது. இந்த நாள் ஆனது முன்னோர்களை வழிபடக்கூடிய உன்னதமான நாளாக உள்ளது. முன்னோர்களை பற்றி தெரியாதவர்கள். முன்னோர்கள் இறப்பு குறித்த திதி தெரியாதவர்கள், பிற அமாவாசைகளில் வழிபாடு செய்ய முடியாதவர்கள் முன்னோர்கள் வழிபாடு நடத்த ஏற்ற நாளாக மகாளய அமாவாசை உள்ளது.
சமீபத்திய புகைப்படம்
அமாவாசையும் முன்னோர்களும்!
நாம் இந்த உலகத்திற்கு வர காரணமாக இருந்த முன்னோர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. மகாளய பட்சம் காலம் தொடங்கி புரட்டாசி அமாவாசை வரை 15 நாட்களும் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்பணம் செய்தால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த 14 நாட்கள் கூட எள்ளும், தண்ணீரும் இறைக்காதவர்கள் 15ஆவது நாளான அமாவாசை அன்று தர்பணம் செய்வது சிறப்பை தரும்.
1. உணவு தானம்
அமாவாசை அன்று அன்ன தானம் செய்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அவ்வாறு செய்வது முன்னோர்களின் ஆசியையும், வாழ்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதியையும் தர வல்லது.
2. எள் விதை தானம்
அனைத்து அமாவாசை காலங்களிலும் எள் விதைகளை தானம் செய்வது மிகவும் உகந்தது ஆகும். அமாவாசை நாளில் எள் தானம் செய்தால் முன்னோர்கள் முக்தி அடைவார்கள் என்பது ஐதீகம்.
3. பழங்கள்
அமாவாசை நாளில் பழ தானம் செய்வது மிகவும் சிறப்பு உடையது ஆகும். அவ்வாறு செய்வதன் மூலம், வாழ்க்கையின் தடைகள் நீங்கி, முன்னோர்களின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும்.
4. வெல்லம்
அமாவாசை அன்று வெல்லம் தானம் செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம், முன்னோர்கள் திருப்தி அடைந்து தங்கள் சந்ததியினரை ஆசீர்வதிப்பதாக நம்பப்படுகிறது.
தர்பணம் செய்யும் போது தர வேண்டியவை
அமாவாசை அன்று தர்பணம் செய்த பிறகு புரோகிதருக்கு பாத்திரங்கள், பழங்கள், தானியங்கள், பச்சைக் காய்கறிகள், வேட்டி-சட்டை, பணம் உள்ளிட்டவற்றை தானம் செய்யலாம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்