Magaram Rasipalan: சிகரம் தொட போகும் மகரம்! செவ்வாய் பெயர்ச்சி தரும் குரு மங்கள யோகம்! இவ்வளவு நன்மைகளா!
Jul 09, 2024, 06:40 AM IST
இந்த வாரம் ஜூலை 12ஆம் தேதி ஆட்சி பெற்ற செவ்வாய் பெயர்சி ஆகி குரு உடன் இணைந்து குரு மங்கள யோகத்தை தருகிறார். இதன் மூலம் மகரம் ராசிக்காரர்களுக்கு திருமணம் சார்ந்த தடைகள் இருந்தால் நீங்கி திருமண ஏற்பாடுகள் நடைபெறும் அமைப்பு உண்டாகும்.
சூரியனின் ஆதிக்கம் கொண்ட உத்ராடம், சந்திரனின் ஆதிக்கம் கொண்ட திருவோணம், செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் மகரம் ராசியில் உள்ளன.
சமீபத்திய புகைப்படம்
காலபுருஷ தத்துவத்தின் 10ஆவது ராசியான மகரம் ராசிக்கு சனி பகவான் அதிபதி ஆவார். இந்த ராசியில்தான் குரு பகவான் நீசமும், செவ்வாய் பகவான் உச்சமும் அடைகின்றனர்.
இந்த வீடு கர்ம, ஜீவன ஸ்தானம் என அழைக்கப்படுகின்றது. இதனால் மகரம் ராசிக்காரர்களுக்கு வேலை செய்யாமல், தொழில் செய்யாமல் தூக்கம் வராது என இயல்பை கொண்டு இருப்பார்கள். இவர்கள் தொழிலில் கவனம் செலுத்தும் போது வாழ்கையில் மிகுந்த நன்மைகளை அடைவார்கள்.
சந்திரன் இடப்பெயர்ச்சி
ஜூலை 8ஆம் தேதி முதல் ஜூலை 14 முடிய இந்த வாரத்தில் சந்திரன் கடகம் ராசி தொடங்கி துலாம் ராசி வரை வரக்கூடிய அமைப்பை பெற்று உள்ளது. தொழில், வேலை, கல்வி உள்ளிட்டவற்றில் உங்களுக்கு எதில் சரிவர அமைப்பு இல்லையோ அதனை மாற்றி யோசிப்பதன் மூலம் வெற்றி பெறக்கூடிய நேரமாக உள்ளது.
குரு மங்கள யோகம்
மேலும் இந்த வாரம் ஜூலை 12ஆம் தேதி ஆட்சி பெற்ற செவ்வாய் பெயர்சி ஆகி குரு உடன் இணைந்து குரு மங்கள யோகத்தை தருகிறார். இதன் மூலம் மகரம் ராசிக்காரர்களுக்கு திருமணம் சார்ந்த தடைகள் இருந்தால் நீங்கி திருமண ஏற்பாடுகள் நடைபெறும் அமைப்பு உண்டாகும்.
வாழ்கை துணை மூலம் ஆதரவு கிடைக்கும்
6ஆம் இடத்தில் அஷ்டமாதிபதி சூரியன் தனித்து நின்று நன்மைகளை செய்கின்றார். சுக்கிரன் புதன் இணைந்து 7ஆம் இடத்தில் இருப்பது வாழ்கை துணை வழியாக ஆதரவு, வெற்றி ஆகியவற்றை தரக்கூடிய வாரமாக இது உள்ளது.
வினைகளை தீர்க்கும் விநாயகர் வழிபாடு
இந்த நேரத்தில் இறை வழிபாடு உங்களுக்கு வெற்றிகளை கொடுக்கும். ஜூலை 9ஆம் தேதியான இன்று வளர்பிறை சதுர்த்தி என்பதால் விநாயகர் வழிபாடு பிரச்னைகளை தீர்த்து நன்மைகளை கிடைக்க செய்யும்.
புதன் கிழமை அன்று விநாயகர் வழிபாடு செய்வதன் மூலம் சிறப்புகளை அடையலாம். முருக வழிபாடு மூலம் கணவன், மனைவி ஒற்றுமையை மேம்பட காரணமாக அமையும். இல்லத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை செய்ய ஏற்ற நாளாக உள்ளது.
ஜூலை 10ஆம் தேதி அன்று வன்னி மரம் அருகில் கௌரி பூஜை செய்தால் பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரும் நிலை ஏற்படும். ஒற்றுமை குறைந்த தம்பதிகள் இணையும் வாய்ப்பு உள்ளது.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9