தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மகரம் ராசிக்கு விலகும் சனி! 30 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் ராஜ வாழ்கை! உச்சத்தில் உட்கார ரெடியா?

மகரம் ராசிக்கு விலகும் சனி! 30 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் ராஜ வாழ்கை! உச்சத்தில் உட்கார ரெடியா?

Kathiravan V HT Tamil

Nov 05, 2024, 03:26 PM IST

google News
மனதில் தெளிவான எண்ணங்கள் பிறக்கும். எதிர்மறையான எண்ணங்கள் தோன்றாது. தனகாரகன் ஆன குரு பகவான் உடன் சுக்கிரன் பரிவர்தனை பெறுவதால் திடீர் பணவரவு உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம், சுப செலவுகள், ஆடம்பர வாழ்கை, வெளிநாட்டுத் தொடர்புகள் ஆகியவை உண்டாகும்.
மனதில் தெளிவான எண்ணங்கள் பிறக்கும். எதிர்மறையான எண்ணங்கள் தோன்றாது. தனகாரகன் ஆன குரு பகவான் உடன் சுக்கிரன் பரிவர்தனை பெறுவதால் திடீர் பணவரவு உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம், சுப செலவுகள், ஆடம்பர வாழ்கை, வெளிநாட்டுத் தொடர்புகள் ஆகியவை உண்டாகும்.

மனதில் தெளிவான எண்ணங்கள் பிறக்கும். எதிர்மறையான எண்ணங்கள் தோன்றாது. தனகாரகன் ஆன குரு பகவான் உடன் சுக்கிரன் பரிவர்தனை பெறுவதால் திடீர் பணவரவு உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம், சுப செலவுகள், ஆடம்பர வாழ்கை, வெளிநாட்டுத் தொடர்புகள் ஆகியவை உண்டாகும்.

ஏழரை சனி பாதிப்பில் உள்ள மகரம் ராசிக்காரர்கள் மிகுந்த சிக்கல்களையும், பிரச்னைகளையும் சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்னைகள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளது. தற்போது கும்பம் ராசியில் உள்ள சனி பகவான் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதனால் கடந்த ஏழரை ஆண்டு காலமாக மகரம் ராசிக்கு நிலவி வந்த ஏழரை சனி பாதிப்பு முழுமையாக விலக உள்ளது. 

சமீபத்திய புகைப்படம்

சனியின் தாக்கம் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்.. இவர்கள் எச்சரிக்கையா இருக்கணும்.. வேலை செய்யும் இடத்தில் கவனம்!

Nov 26, 2024 11:41 AM

மகாலட்சுமி ராஜ யோகம்: சந்திர செவ்வாய் சேர்க்கையால் ஜாக்பாட் அடிக்கப் போகும் அந்த 3 ராசிகள் யார் தெரியுமா?

Nov 26, 2024 11:17 AM

ராகு பகவானால் தனுசு ராசிக்கு நிம்மதி கிடைக்க போகுது.. மனைவி ஆதரவாக இருப்பார்.. நிதி பிரச்சனைகள் நீங்கும்!

Nov 26, 2024 11:12 AM

சனி பெயச்சியால் ஜாக்பாட் .. இந்த மூன்று ராசிக்கு இனி கவலை வேண்டாம்.. வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.. நல்ல காலம் ஆரம்பம்!

Nov 26, 2024 10:34 AM

குரு படாத பாடு படுத்த போகிறார்.. பணத்தை கட்டு கட்டாக எண்ணும் ராசிகள்.. அடியோடு வாழ்க்கை மாறப்போகுது

Nov 26, 2024 10:29 AM

'தெத்தியடி ஆட்டம் ஆரம்பம்.. அச்சம் வேண்டாம்.. அதிர்ஷ்டம் வரும்.. இன்று நவ. 26 மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள்!

Nov 26, 2024 05:00 AM

அவமானங்கள் வெகுமானங்கள் ஆகும்!

இதனால் வாழ்கையில் புதிய வாய்ப்புகள், முன்னேற்றங்கள், பதவி உயர்வு, பிரிந்த உறவுகள் சேர்வது உள்ளிட்ட நன்மைகள் கிடைக்க போகின்றது. மகரம் ராசிக்காரர்களின் நேற்றைய அவமானங்கள் இனி வெகுமானங்களாக மாறப்போகின்றது. 

மீனம் ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகும் போது ஏற்கெனவே சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் உள்ள நிலையில் ஐந்தாவது ராசியாக சனி பகவான் செல்ல உள்ளார். மீனம் ராசி என்பது மோட்ச ஸ்தானம் என்று காலபுருஷனால் வகைப்படுத்தப்படுகின்றது. இந்த மோட்ச ஸ்தானத்தில் 5 கிரகங்கள் அமர உள்ளது. 

மூன்றாம் இடத்தால் முன்னேற்றம்!

ராசிக்கு 3, 6, 11ஆகிய இடங்களில் சனி பகவான் சஞ்சரிக்கும் போது நினைத்து பார்க்க முடியாத ஏற்றங்களையும், செல்வ செழிப்புகளையும் தரும். மகரம் ராசியில் இருந்து 3ஆம் இடமான மீனம் ராசிக்கு சனி பகவான் பெயர்கிறார். இது முயற்சி ஸ்தானம் என்றும், உபஜெய ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகின்றது.

அதே நாளில் சுக்கிரன் மற்றும் குரு ஆகியோர் பரிவர்தனை யோகத்தை பெறுகின்றனர். இந்த கிரக சேர்க்கைகள் அரசு தொடர்பான விவகாரங்கள் அனுகூலங்களை தரும். மனதில் தெளிவான எண்ணங்கள் பிறக்கும். எதிர்மறையான எண்ணங்கள் தோன்றாது. தனகாரகன் ஆன குரு பகவான் உடன் சுக்கிரன் பரிவர்தனை பெறுவதால் திடீர் பணவரவு உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம், சுப செலவுகள், ஆடம்பர வாழ்கை, வெளிநாட்டுத் தொடர்புகள் ஆகியவை உண்டாகும். 

சனி பகவான் தரும் ஜாக்பாட்!

அரசு, அரசியல் சார்ந்து இயங்குபவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு சிறப்பான காலமாக இது இருக்கும். வாழ்கையில் புதிய திருப்பங்கள் உண்டாகும். நீங்கள் கொண்ட வைராக்கியங்கள் வெற்றி பெறும் காலம் உண்டாகும். திருமணம் ஆகாத மகரம் ராசிக்காரர்களுக்கு திருமணம் ஆகும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வீர்கள். பணியிடத்தில் தள்ளி போன பதவி உயர்வு கிடைக்கும். 

செவ்வாய் பகவான் ராசிக்கு 6ஆம் இடத்தில் மறைகிறார். 5ஆம் இடத்தில் உள்ள குரு பகவான் உங்கள் ராசியை பார்க்கிறார். குரு பார்வை நன்மையை கொண்டு வரும் என்பதால் உங்கள் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி