தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Magara Jothi 2024: ’மகரஜோதி விழா! மலையேற கட்டுப்பாடுகள் விதிப்பு! முழு விவரம் இதோ!

Magara jothi 2024: ’மகரஜோதி விழா! மலையேற கட்டுப்பாடுகள் விதிப்பு! முழு விவரம் இதோ!

Kathiravan V HT Tamil

Jan 15, 2024, 07:24 AM IST

google News
”இன்று காலை 11.30 மணி உடன் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது”
”இன்று காலை 11.30 மணி உடன் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது”

”இன்று காலை 11.30 மணி உடன் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது”

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி திருவிழா நடைபெற உள்ள நிலையில் பல்வேறு ஏற்பாடுகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்திய புகைப்படம்

புதன் பெயர்ச்சி உச்சம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. இனி தவிர்க்க முடியாது..!

Nov 15, 2024 03:05 PM

அதிர்ஷ்ட கதவு திறந்தது.. சூரியன் தட்டி தூக்கிய ராசிகள்.. அக்டோபர் பண விளையாட்டு.. தவிக்கப் போவது யார்?

Nov 15, 2024 02:55 PM

சனி தலையில் கை வைத்தார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. 2025 வரை பணமழை.. என்ன நடக்கும்!

Nov 15, 2024 02:48 PM

சனி சதய நட்சத்திர பெயர்ச்சி.. இனி விட முடியாத ராசிகள்.. சொர்க்கம் பூமியில் வருகிறது..!

Nov 15, 2024 10:06 AM

இன்று சனி பகவான் வேகம் மாறும்.. இது மூன்று ராசிக்கு சோகம் தான்.. மோசமான விளைவு காத்திருக்கிறது.. கவனம்!

Nov 15, 2024 07:06 AM

அடாவடி அசுர யோகம் தரும் கேது.. 2025 பணம் கொட்டும்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Nov 15, 2024 07:00 AM

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள பொன்னம்பலமேடு பகுதியில் ஏற்றப்படும் மகரவிளக்கு, தீபாராதனையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவில் மற்றும் அதன் வளாகத்தில் திரண்டு வருகின்றனர். 

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மற்றும் வனத்துறையின் ஆதரவுடன், பொன்னம்பலமேட்டில் கேரள அரசு ஜோதி ஏற்றுவது, மலை உச்சிக்கு அருகில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்கள் பின்பற்றும் நடைமுறையின் தொடர்ச்சியாக உள்ளது. 

இந்த நிகழ்வுக்காக ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் நகைகள், திரளான பக்தர்களுடன் மலைக்கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இன்றைய தினம் திருவாபரணம் சுவாமி ஐயப்பனுக்கு அலங்கரிக்கப்பட்டு, மாலையில் சன்னதியில் வழக்கமான 'மஹா தீபாராதனை' நடைபெறும்.

இது தொடர்பாக பேசிய திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், மகர ஜோதியை பக்தர்கள் காணும் வகையில் சபரிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள 10 காட்சி முனைகளில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். 

சபரிமலையில் நாளை நடைபெறும் மகரவிளக்கு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. பக்தர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என கூறி உள்ளார். 

மேலும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சுமார் 80 லட்சம் பிஸ்கட்டுகள் மருத்துவக் குடிநீருடன் பக்தர்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறி உள்ளார். 

இன்று காலை 11.30 மணி உடன் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை