தலை தீபாவளிக்கு செல்ல வேண்டிய கோயில்கள் என்னென்ன? எந்த மாதிரியான பலன்களை தரும்!
Oct 29, 2024, 03:40 PM IST
குறிப்பாக தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியினர் கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடும்போது அவர்களது அவர்களது இல்லற வாழ்வும், புத்திர பாக்கியமும், பொருளாதார நிலையும் சீராக உயரும் என்பது நம்பிக்கை. தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்கள் செல்ல வேண்டிய கோயில்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
இந்தியாவில் கொண்டாடப்படும் பிரதான கொண்டாட்டங்களில் ஒன்றாக தீபாவளி பண்டிகை இருந்து வருகிறது. இந்த தீபாவளியின் போது மக்கள் தீபம் ஏற்றி, புத்தாடை அணிந்து, பலகாரங்கள் சாப்பிட்டு மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். இந்த தீபாவளி தினம் உருவாவதற்கு பின் இந்து மதத்தில் பல புராண கதைகள் கூறப்படுகின்றன. இருப்பினும் பிரதான கதையாக நரகாசுரனை கிருஷ்ணன் வதைத்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது.
சமீபத்திய புகைப்படம்
இந்நிலையில் இந்த தீபாவளி திருநாள் அன்று விசேஷ கோவில்களுக்கு செல்லும்போது கடவுள்களின் அருளை நேரடியாக பெற முடியும். குறிப்பாக தல தீபாவளி கொண்டாடும் தம்பதியினர் கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடும்போது அவர்களது அவர்களது இல்லற வாழ்வும், புத்திர பாக்கியமும், பொருளாதார நிலையும் சீராக உயரும் என்பது நம்பிக்கை. தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்கள் செல்ல வேண்டிய கோயில்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
தலை தீபாவளி
தலைத் தீபாவளி என்பது திருமணமான புதுத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். இப்பண்டிகையின் பொழுது மணமகள் வீட்டிலிருந்து புத்தாடைகள் மணமகனுக்கு தரப்படுகின்றன.
செல்வங்களின் அதிபதி குபேரன்
தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியினரின் வாழ்வில் செல்வம் செழித்தொழுக வேண்டும். எனவே அவர்கள் செல்வங்களின் அதிபதியான குபேரன் ஆலயத்திற்கு செல்வது அவர்களது வாழ்வின் செழுமையாக்கும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள குபேரர் ஆலயத்திற்கு சென்று வந்தால் அவர்களின் வாழ்வில் செல்வமும் வளமும் ஒருசேர கிடைத்து வாழ்க்கை செழிக்கும் என நம்மப்படுகிறது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இந்த கோயிலுக்கு தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியினர் சென்றுவர பரிந்துரை செய்யப்படுகிறது.
ஸ்ரீரங்கம் பெருமாள்
வாழ்வில் வளம் கொழிக்கவும், வாழ்க்கை செழிக்கவும் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்ல வேண்டும். தீபாவளி அன்று இந்த கோயில் பெருமாளுக்கு எண்ணெய்க் காப்பிட்டு, திருமஞ்சனம் செய்து, புதிய வஸ்திரம் அணிவித்து அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்று ஆழ்வார்களையும், ஆச்சார்யர்களையும், கிளி மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்த பின் திருமஞ்சனம் நடைபெறும். அங்கே பெருமாளுக்கு விசேஷமான ‘ஜாலி அலங்காரம்’ செய்வர். ஜாலி அலங்காரம்' என்பது தீபாவளி அன்று மட்டும் நடைபெறும் அலங்காரமாகும்.
அம்மன்
தஞ்சாவூரில் இருக்கும் ஸ்ரீபங்காரு காமாட்சி அம்மன் கோயிலுக்கு தம்பதி சகிதமாக சென்று வர வீட்டில் அனைத்து செல்வங்களும், பாக்கியங்களும் கிடைக்கும். தீபாவளி அன்று இந்த காமாட்சி அம்மனுக்கு முறத்தில் வைத்து படைக்க வேண்டும். அதில் தீபாவளி பலகாரங்களை வைத்து வணங்க வேண்டும். இக்கோயிலுக்கு சென்று வணங்குவதால் வீட்டில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை ஆகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்