கும்ப ராசிக்காரர்களே.. சூரியன் நுழைகிறார்.. 3 ராசிகள் மீது அதிர்ஷ்டக் காத்து பலமா வீசும்..!
Dec 13, 2024, 01:58 PM IST
Lord Sun: சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெறுகின்றனர்.
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும். சூரிய பகவான் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்ந்து வருகின்றார்.
சமீபத்திய புகைப்படம்
இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் சூரிய பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்ப ராசியில் நுழைகின்றார்.
இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும் ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சூரிய பகவான் இணைந்து பயணம் செய்யப்போகின்றார். சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெறுகின்றனர்.
மேஷ ராசி
சூரிய பகவானின் கும்ப ராசி பலன் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்றுத்தரப்போகின்றது. தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைக்க கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் கையில் அதிகரிக்கும். எடுத்துக் கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிக ஒப்பந்தம் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நீண்ட கால முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
சிம்ம ராசி
சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தர போகின்றது. நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பாராட்டுகளை பெற்று தரும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
தனுசு ராசி
சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் 2025 ஆம் ஆண்டில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி பாதுகாப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழில் வளர்ச்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல தொடக்கத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும் திட்டமிட்ட காரியங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கக்கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கக்கூடும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.