50 ஆண்டுகளுக்குப் பிறகு.. சனி ராகு மேலே அமர்ந்தார்.. தொட்டதெல்லாம் தூள் பறக்கும் ராசிகள்..
Nov 06, 2024, 01:02 PM IST
Lord Saturn and Lord Rahu: சனி மற்றும் ராகு இருவரும் ஒரே நட்சத்திரத்தில் இணைந்து பயணம் செய்கின்றனர். இதனுடைய தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் வாழ்க்கையில் செழிப்பை பெறப்போகின்றனர்.
Lord Saturn and Lord Rahu: நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் இவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
சமீபத்திய புகைப்படம்
கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்ற ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கி இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அந்த வகையில் அக்டோபர் மூன்றாம் தேதி அன்று சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில் நுழைந்தார். அதே நட்சத்திரத்தில் ராகு பகவானும் பயணம் செய்து வருகின்றார். 50 ஆண்டுகளுக்கு பிறகு சனி மற்றும் ராகு இருவரும் ஒரே நட்சத்திரத்தில் இணைந்து பயணம் செய்கின்றனர். இதனுடைய தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் வாழ்க்கையில் செழிப்பை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்கள் காணலாம்.
மகர ராசி
சனி மற்றும் ராகு சதய நட்சத்திர பயணம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். எதிர்பார்த்ததை விட உங்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கக்கூடும். ராகு பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு செல்வத்தின் யோகம் அதிகமாக இருக்கும். திடீர் நிதி வரவு இருக்கும்.
பண வரவிலிருந்து எந்த குறையும் இருக்காது. சிக்கி கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும். வாழ்க்கையில் இழந்த நிம்மதி உங்களுக்கு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம் ராசி
சனி ராகு இணைந்து சதயத்தில் பயணம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் தேடி வரும். எதிர்பாராத நல்ல பலன்கள் உங்களுக்கு திடீரென்று வரும் உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சனி சஞ்சாரம் செய்து வருகின்றார். ராகு பகவான் ஆறாவது வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் மன மகிழ்ச்சி உங்களுக்கு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் அதிர்ஷ்டத்தை சனி மற்றும் ராகு சேர்ந்து கொடுக்கப் போகின்றனர். பண சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர்பாராத மாற்றங்கள் உங்களுக்கு நிகழக்கூடும். அனைத்தும் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தொழில் ரீதியாக உங்களுக்கு நிறைய பயணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். இதுவரை நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கையில் நீங்கள் எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்காக போது சிக்கல்கள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய சாதனைகள் புரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.