தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: பாதாளத்தில் ஆசி கொடுக்கும் செம்பு முருகன்.. கருங்காலி மாலை நாயகன்

HT Yatra: பாதாளத்தில் ஆசி கொடுக்கும் செம்பு முருகன்.. கருங்காலி மாலை நாயகன்

Feb 14, 2024, 07:00 AM IST

google News
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட கோயில்கள் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருபவர் முருகப்பெருமாள் தமிழ் மக்களின் கடவுளாக திகழ்ந்து வரக்கூடிய முருக பெருமான் பல்வேறு சிறப்பு தலங்களில் வீற்றிருந்து மக்களை காத்து வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

அந்த வகையில் சிறப்புமிக்க தளங்களில் ஒன்றை தான் நாம் பார்க்கப் போகின்றோம். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கோயில் தான் பாதாள செம்பு முருகன் கோயில். இந்த கோயிலின் சிறப்பு என்னவென்றால் இதன் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது.

பூமிக்கு அடியில் வீற்றிருக்கும் முருக பெருமான் செம்பு உலோகத்தால் ஆன காரணத்தினால் இவர் பாதாள செம்பு முருகன் என அழைக்கப்படுகிறார். இந்த கோயிலில் தரைத்தளத்தில் மற்றும் பாதாளத்தில் என இரண்டு கருவறைகள் உள்ளன. இரண்டு கருவறைகள் முருகன் கோயில் என இது சிறப்பு பெற்று இருந்து வருகிறது.

தல வரலாறு

 

பழனி மலையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் சிலை போகர் சித்தர் என்பவரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. அந்த சித்தரின் மறு அவதாரமாக கருதப்படக் கூடிய திருக்கோவிலூர் சித்தர். போகர் சித்தரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு தினமும் பூஜை செய்து வந்தார். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு பழனி முருகன் கோயிலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ராமலிங்கம் பட்டி என்ற கிராமத்தில் திருக்கோவிலூர் சித்தர் வசித்து வந்துள்ளார்.

அப்போதாவது ஒன்றரை அடி உயரத்தில் ஒரு முருகன் சிலையை உலோகத்தால் செய்து பாதாள அறையில் வைத்து பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்துள்ளார். நாளடைவில் பாதாளத்திலேயே இருந்த முருகன் பூஜை வழிபாடு இல்லாமல் அப்படியே இருந்துள்ளது பின்னர் பல நூற்றாண்டுகள் கடந்து ராமநாதபுரம் சமஸ்தானத்தின் வம்சாவளியைச் சேர்ந்தவர் மீண்டும் பூஜைகள் நடத்த தொடங்கியுள்ளார். தற்போது வரை அந்த பூஜைகள் நிற்காமல் நடந்து வருகிறது.

இந்த உலோகத்தால் ஆன பாதாள முருகப் பெருமான் நின்று கோலத்தில் காட்சி கொடுத்து வருகிறார் அவருடைய வலது கையில் அபயம் முத்திரையும் இடது கையில் வெற்றியே உருவான வேலும் உள்ளன. திருக்கோவிலூர் சித்தர் வழிபட்ட முருகன் சிலையும் இந்த சிலைக்கு முன்பாகவே உள்ளன.

இந்த கோயிலில் மேலும் சிறப்பு என்னவென்றால் கோயில் வளாகத்தின் முன் புறத்தில் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய சங்கிலி கருப்புசாமி கிழக்கு நோக்கி காட்சி கொடுக்கிறார். 15 அடி உயரம் கொண்ட கருப்பு சாமியின் சிலை ஒரே கல்லால் ஆனது என கூறப்படுகிறது. இந்த கோயிலின் கோபுரத்திற்குள் 36 அடி உயரம் கொண்ட சிவன் சிலை அமைந்திருக்கின்றது.

இந்த கோயிலில் மக்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படும் விபூதி பல்வேறு விதமான நோய்களை குணமாக்குவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக பிரசாதமாக வழங்கப்படும் விபூதி 18 வகை மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகின்றது.

முருகனின் பாதத்தில் வைக்கப்பட்டு பல்வேறு விதமான பூஜைகள் செய்யப்பட்டு இந்த கோயிலில் கருங்காலி மாலைகள் கொடுக்கப்படுகின்றன. அதேபோல சந்தன மரத்தால் செய்யப்பட்ட வேல், கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட வேலை என பக்தர்கள் முருகனுக்கு சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

கிரக தோஷங்கள் குழந்தையின்மை, திருமண தடைகள், வேலைவாய்ப்பின்மை, சொத்து சிக்கல்கள், கல்வி அறிவு இல்லாமை, குடும்ப சிக்கல்கள், மன உளைச்சல்கள் என அனைத்து விதமான சிக்கல்களுக்கும் தீர்வு கொடுக்கும் தெய்வமாக பாதாள முருகன் திகழ்ந்து வருகின்றார். இந்த கோயிலில் இருக்கக்கூடிய மருதபெருமானை வழிபட்டால் குலதெய்வத்தை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

அமைவிடம் இந்த கோயிலில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பழனி செல்லும் வழியில் ரெட்டியார்சத்திரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. அந்த ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமபுரம் செல்லும் வழியில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பாதாள செம்பு முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இருக்கும் சூழலை கண்டாலே மனம் சாந்தி ஆகிவிடும் என கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி