Lord Venus: சுக்கிர பகவானின் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள்
Nov 26, 2023, 12:46 PM IST
சுக்கிர பகவானின் சிறப்பு பலன்களை பெற போகின்ற ராசிகளை காண்போம்.
நவக்கிரகங்களில் காதல், திருமணம், செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி உள்ளிட்டவைகளுக்கு சுக்கிர பகவான் காரணியாக விளங்கி வருகிறார். நவகிரகங்களில் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சுப கிரகங்களில் ஒருவராக இவர் விளங்கி வருகிறார்.
சமீபத்திய புகைப்படம்
நவக்கிரகங்கள் அவ்வப்போது சிறிது காலம் எடுத்துக் கொண்டு தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் சுக்கிர பகவான் நவம்பர் மூன்றாம் தேதியன்று கன்னி ராசிக்குள் புகுந்தார். இந்த கிரக மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுக்கிர பகவானின் இந்த இடப்பெயர்ச்சியானது சுபமானதாக அமைந்துள்ளது. 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.
கடக ராசி
சுக்கிர பகவான் கன்னி ராசிக்குள் நுழைந்த காரணத்தினால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண வரவு அதிகரிக்கின்ற காரணத்தினால் சேமிப்பு அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறைந்து பணம் அதிகமாகும். நல்ல செய்தி உங்களைத் தேடி வரும் குழந்தைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் என கூறப்படுகிறது.
மிதுன ராசி
சுக்கிரன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கின்றார். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்க வாய்ப்பு உள்ளது.
கன்னி ராசி
சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். ஆன்மீகத்தில் உங்களுடைய கவனம் அதிகரிக்கும். சுக்கிரன் அதிக பலன்களை உங்களுக்கு கொடுப்பார்.
விருச்சிக ராசி
சுக்கிர பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுக்கின்றார். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முயற்சிகள் நல்ல பலன்களை கொடுக்கும். வெளிநாடு பயணங்கள் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவு அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் சேமிப்பு அதிகரிக்கும். தேவையில்லாத செலவுகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்