தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி புரட்டி எடுக்க போகிறார்.. 4 ராசிகளுக்கு அடி உறுதி

சனி புரட்டி எடுக்க போகிறார்.. 4 ராசிகளுக்கு அடி உறுதி

Mar 07, 2024, 05:45 PM IST

google News
Saturn: சனிபகவானால் கஷ்டப்படப் போகும் ராசிகளை காண்போம்.
Saturn: சனிபகவானால் கஷ்டப்படப் போகும் ராசிகளை காண்போம்.

Saturn: சனிபகவானால் கஷ்டப்படப் போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய சனிபகவான் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சமீபத்திய புகைப்படம்

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

கர்மவினைகளை இவர் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். சனி பகவான் தற்போது தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கும்ப ராசியில் சனிபகவான் அஸ்தமனம் ஆனார் ஒரு மார்ச் 18 ஆம் தேதி அன்று உதயமாகின்றார். சனி பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்மறையான காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. செலவுகளால் கவலைகள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் அதிக சவால்கள் உண்டாகும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இழப்புகள் ஏற்படும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது சுப காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சனி உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு வியாபாரத்தில் தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி இழப்புகள் ஏற்படக்கூடும். புதிய வாய்ப்புகள் வருவதற்கு சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முடிவுகள் எடுக்கும் போது மிகவும் சிந்தித்து எடுக்க வேண்டும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மீன ராசி

 

உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் சனிபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும். ஒரு வித பயம் இருந்து கொண்டே இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் நடப்பதற்கு சற்று தாமதமாகும். எந்த காரியமாக இருந்தாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி