தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Transit: ராகு வச்சி செய்யப் போகும் ராசிகள் இவர்கள்தான்

Rahu Transit: ராகு வச்சி செய்யப் போகும் ராசிகள் இவர்கள்தான்

Nov 26, 2023, 04:51 PM IST

google News
ராகு பகவானிடம் கஷ்டப்பட போகும் ராசிகளை காண்போம்.
ராகு பகவானிடம் கஷ்டப்பட போகும் ராசிகளை காண்போம்.

ராகு பகவானிடம் கஷ்டப்பட போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் இருவரும் எப்போதும் இணைந்தே பயணம் செய்வார்கள் அதிலும் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்வார். ராகு மற்றும் கேது வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் கூடுமானவரை அனைவருக்கும் சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

குருபகவான் பாடல் தெரியுமா?.. பண ராகத்தில் விளையாடும் ராசிகள்.. இனி உச்சம் தொடுவது உறுதி!

Dec 05, 2024 07:00 AM

இந்த மூன்று ராசிகளுக்கு பண மழை பொழியும்.. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.. அதிஷ்டம் உங்க பக்கம்!

Dec 05, 2024 06:10 AM

‘நிம்மதி தேடி வரும்.. பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Dec 05, 2024 05:00 AM

’டிசம்பர் 16இல் வக்ர நிவர்த்தியாகும் புதன்!’ அதிர்ஷ்டத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்! இனி இவங்கள தொடவே முடியாது!

Dec 04, 2024 08:29 PM

சனி தரும் முக்கியமான பலன்கள்.. 3 ராசிகள் தலைக்கு மேல் கொட்டப் போகிறது.. வந்துவிட்டது யோகம்..!

Dec 04, 2024 03:49 PM

சுக்கிரன் - ராகு சேர்க்கை.. 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுது.. !

Dec 04, 2024 12:34 PM

நிழல் கிரகங்களாக விளங்கக்கூடிய இவர்கள் 18 மாதங்களுக்கு ஒரு முறை தங்களது இடத்தை மாற்றுவார்கள். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். அதனால் இவர்களைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

ராகு மற்றும் கேது கடந்த அக்டோபர் 30ம் தேதி அன்று தங்களது இடத்தில் மாற்றினார்கள். ராகு பகவான் மேஷ ராசியில் குரு பகவானோடு சேர்ந்து பயணம் செய்து வந்தார். அக்டோபர் 30ஆம் தேதிக்கு பிறகு மீன ராசிக்குள் நுழைந்தார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும், சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

மேஷ ராசி

 

ராகு பகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். இந்த இடமாற்றம் உங்களுக்கு சிறப்பாக இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களிடம் கவனமாக பேச வேண்டும். எதிரிகளால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். வருமானத்தில் சிக்கல்கள் ஏற்படும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி

 

ராகு பகவான் உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது. தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் நான்காம் வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க சற்று தாமதமாகும். மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படும். அதனை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டால் அமைதியாக செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி