Guru: குரு இடமாற்றத்தால் பணத்தில் குளிக்க போகும் ராசிகள்
Mar 01, 2024, 11:51 AM IST
ரிஷபத்தில் நுழையும் குருபகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து காண்போம்.
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ராஜகுருவாக திகழ்ந்த வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான சுகபோக வாழ்க்கை கிடைக்கும் என கூறப்படுகிறது. குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
சமீபத்திய புகைப்படம்
குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானின் ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார்.
ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குடியேறப் போகின்றார். இதனால் உங்களுக்கு குடும்ப ஸ்தானத்தில் நல்ல யோகம் கிடைக்க உள்ளது. உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. கடன் சிக்கல்கள் குறையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
ரிஷப ராசி
உங்கள் ராசிகள் குரு பகவான் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தைகளால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
மிதுன ராசி
புதன் பகவானின் ராசியான உங்களுக்கு சுக்கிரன் யோகத்தை குரு பகவான் கொடுக்க போகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கடன் சிக்கல்கள் நிவர்த்தி அடையும். சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடக ராசி
குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நினைத்த காரியத்தை செய்து கொடுக்கும். பண வரவிலிருந்து குறையும் இருக்காது. வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொட்ட காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9