Kumbam Rasi: “மூன்று கோள்கள் வக்ரம்; பாஸ்ட்ட பாத்து பேசுங்க; இல்ல வேலை அம்பேல்” - கும்ப ராசிக்கான செப்., மாத பலன்கள்!
Aug 22, 2023, 07:57 AM IST
கும்ப ராசிக்கான செப்டம்பர் மாத பலன்கள்!
இதில் சொல்லப்படும் பலன்கள் ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 20 வரையிலான காலத்தில் கணக்கிடப்பட்டிருக்கிறது. கும்பராசிக்காரர்கள் அதிகாரம் மற்றும் பங்கு வழி போராட்டமும் போட்டியும் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
சமீபத்திய புகைப்படம்
ஆகையால் அதிகாரம் படைத்தவர்களிடம் நீங்கள் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பங்குதாரர்களிடமும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனி பகவான் வக்ரம் பெற்று சூரிய பகவானை பார்க்கிறார். அடுத்த நான்கு நாட்களிலேயே புதனும் வக்கிரம் பெறுகிறார்.
அடுத்த சில நாட்களிலேயே அவர் அஸ்தகதம் ஆகிறார். அதனால் முழு பவரையும் புதனானவன் ஏழாம் இடத்து அதிபதியான சூரியனிடம் ஒப்படைத்து விடுகிறார்.
ஆகையால் சூரியன் தான் ஐந்து மற்றும் எட்டாம் இடத்திற்கு உரிய வேலைகளை செய்யும் சூழ்நிலை உருவாகும். ஆறாம் இடத்தில் 4 மற்றும் 9 ஆகிய இடங்களுக்கு உரிய பூர்வ பாக்யாதிபதியும் வக்கிரம் பெறுகிறார். ஆகையால் புகழ், மரியாதையில் கேடு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
செவ்வாய் கிரகத்தை பொருத்தவரையில் நவாம்சத்தில் அவர் உச்ச வீட்டிற்கு வந்து விடுகிறார். ஆகையால் காரியங்கள் அனைத்தும் இமாலய வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
courtesy: Dr. Arut Kudanthai Aaru Ganesan
டாபிக்ஸ்