தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Karthigai Deepam 2022: கார்த்திகை தீபத் திருநாள் வழிபாடு முறை!

Karthigai Deepam 2022: கார்த்திகை தீபத் திருநாள் வழிபாடு முறை!

Dec 05, 2022, 03:24 PM IST

google News
கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றும் போது அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்தைப் போட வேண்டும்.
கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றும் போது அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்தைப் போட வேண்டும்.

கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றும் போது அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்தைப் போட வேண்டும்.

கடவுளின் மாதங்களில் ஒன்றான கார்த்திகை மாதம் மிகவும் சிறப்புப் பெற்ற மாதமாகும். சபரிமலை ஐயப்பன் கோயில் விசேஷம் முதல் கார்த்திகை தீபத் திருவிழா வரை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

சனியன்று எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் உங்க ஜாதகத்தில் சனி தோஷங்கள் நீங்கும் தெரியுமா!

Dec 21, 2024 01:36 PM

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் மகா தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்துதல் அந்நாளில் நடைபெறும். இந்த தீபத் திருவிழா நாளை (டிசம்பர் 6) விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் வழிபாடு செய்வது குறித்து இங்கே காண்போம்.

திருக்கார்த்திகை திருநாளன்று அதிகாலை எழுந்தவுடன் குளித்துவிட்டு சிவனைத் துதிக்க வேண்டும். பின்னர் சிவனை வில்வ இலையால் அர்ச்சனை செய்ய வேண்டும். வடை, பாயாசம், அன்னம், போன்ற உணவுகளைச் சமைத்து சிவபெருமானுக்கும் தாயார் பார்வதிக்கும் படையலிட வேண்டும்.

அவல், பொரி வெல்லப்பாகு ஆகியோற்றத்தைச் சேர்த்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும், வேர்க்கடலை உருண்டையும் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மண் அகல் விளக்குகளை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் அதனைச் சுத்தமாகத் துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த விளக்குகளில் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

பின்னர் பூஜை அறையில் அந்த விளக்குகளைக் கோலமிட்ட இடத்தில் அழகாக அடுக்கி வைக்க வேண்டும். எளிதில் பற்றிக் கொள்வதற்காகத் தெரியும் நுனியில் கற்பூரத் துகள்களைப் போட்டு வைத்தால் சுலபமாகப் பற்றவைத்து விடலாம்.

திருவண்ணாமலை தீபம் ஏற்றிய பிறகு சிலர் வீடுகளில் தீபம் ஏற்றும் வழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு தீபம் ஏற்றினால் தீபத்தை ஏற்றும்போது அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்தைப் போட வேண்டும். பின்னர் பொரி உருண்டை, வேர்க்கடலை உருண்டைகளைச் சுவாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.

வீட்டில் விளக்குகள் அணிவகுத்தார் போல வரிசையாக அடுக்கி வைத்து வழிபடலாம். வீட்டில் அனைத்து இடங்களிலும் விளக்குகள் வைக்க வேண்டும். கழிவறை உட்பட அனைத்து இடங்களிலும் விளக்கு வைக்க வேண்டும்.

இந்த கார்த்திகை திருநாளில் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி