HT Yatra: திடீரென்று மறைந்த அக்னி பகவான்.. லிங்க பூஜை வழிபாடு.. காட்சி கொடுத்த அக்னீஸ்வரர்..!
Jun 18, 2024, 06:00 AM IST
HT Yatra: எத்தனையோ சிறப்புகளைக் கொண்டு காலத்தால் அளிக்க முடியாத பல கோயில்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களக்காட்டூர் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்.
HT Yatra: நிலங்களுக்காக மன்னர்கள் பலரும் போரிட்டு மிகப்பெரிய ராஜாவாக உயர்ந்தார்கள். எத்தனை படை பலத்தைக் கொண்டிருந்தாலும் எதிரிகளாக நாடுகளுக்காக பல மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைவருக்கும் குலதெய்வமாக விளங்கி வந்து ஒரே தெய்வம் சிவபெருமான்.
சமீபத்திய புகைப்படம்
குறிப்பாக இந்தியாவின் தெற்கு பகுதிகளில் பாண்டியர்கள் மற்றும் சோழர்களுக்கு மிகப்பெரிய போராட்டம் இருந்து வந்தது இருப்பினும் இவர்கள் இருவருக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்தார்.
மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கென மிகப் பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்தப்படுகிறது. திரும்பும் திசையெல்லாம் இந்தியா முழுவதும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டில் சிவபெருமான் இல்லாத இடமே கிடையாது எனும் அளவிற்கு காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமான் கோயில்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் தெற்கு பகுதியை முழுமையாக ஆட்சி செய்து வந்த மிகப் பெரிய சோழ மன்னன் ஆன ராஜராஜ சோழன் தனது குலதெய்வமான சிவபெருமானுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தார்.
ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்று வரை கம்பீரமாக பல இடர்பாடுகள் கடந்து ஜொலித்து வருகிறது தஞ்சை பெருவுடையார் திருக்கோயில். பல்வேறு அதிசயங்களை உள்ளடக்கி கலை நுட்பத்தின் களஞ்சியமாக அந்த திருக்கோயில் விளங்கி வருகிறது.
இதுபோன்று எத்தனையோ சிறப்புகளைக் கொண்டு காலத்தால் அளிக்க முடியாத பல கோயில்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களக்காட்டூர் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
மிகவும் சிறிய கோயிலாக இருந்தாலும் இந்த கோயிலின் கீர்த்தி மிகவும் பெரியது. பல்வேறு வித்தியாசமான அதிசயங்களோடு இங்கு இருக்கக்கூடிய உப தெய்வங்கள் காட்சி கொடுத்து வருகின்றன. அர்த்தநாரீஸ்வரர் இந்த திருக்கோயிலில் ரிஷப வாகனத்தின் மீது காட்சி கொடுக்கின்றார். இது மிகவும் காணக்கிடைக்காத அரிதான காட்சியாகும்.
இது கற்கோயில் ஆகும். நான்கு சதுரம் கொண்ட இடம் தான் கர்ப்ப கிரகம் ஆகும். தெற்கு முகமாக இந்த கோயிலின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் கர்ப்ப கிரகத்தில் விமானம் தற்போது இல்லை என்றாலும் ஏற்கனவே இருந்த அறிகுறி காணப்படுகிறது.
இந்த திருக்கோயிலில் தட்சிணாமூர்த்தி மற்றும் பிரம்மதேவரின் சிலைகள் காணப்படுகின்றன. இந்த கோயிலில் வந்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
தல வரலாறு
ஒருமுறை அக்னி தேவன், வாயு தேவன், வருண தேவன் ஆகிய மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென கோபம் கொண்ட அக்னி பகவான் உடனே மறைந்து விட்டார். இதன் காரணமாக உலகத்தில் நடத்தப்பட்ட யாகங்கள் மற்றும் அக்னி சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் தடைபட்டன.
அனைத்து காரியங்களும் திடீரென்று தடைபட்ட காரணத்தினால் முனிவர்கள் மற்றும் தேவர்கள் என அனைவரும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதிலிருந்து விடுபடுவதற்காக அனைவரும் சேர்ந்து லிங்க பூஜை செய்தனர்.
அதற்குப் பிறகு சிவபெருமான் பூஜை செய்தவர்களின் முன்பு தோன்றி அக்கினி பகவானை அங்கே அழைத்துள்ளார். உடனே அக்னி பகவான் இரண்டு முகங்கள் கொண்டு, மூன்று பாதம் கொண்டு, நான்கு கொம்பு மற்றும் 7 ஜுவாலையுடன் வெளிப்பட்டு காட்சி கொடுத்தார்.
சிவபெருமானை தரிசனம் செய்வதற்காகவே வாயு தேவன், வருண தேவன் உள்ளிட்ட ரோடு தர்க்கம் செய்து நாடகமாடினேன் என அக்னி பகவான் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சிவபெருமான் காட்சி கொடுத்த இடத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அக்னி தேவன் வழிபாடு நடத்தினார். அக்னி தேவனுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த இடம் என்கின்ற காரணத்தினால் இவருக்கு அக்னீஸ்வரர் என பெயர் சூட்டப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9