Guru and Sukran: குரு மற்றும் சுக்கிரன் இணைவு.. தூள் கிளப்பி வெல்லப்போகும் ராசிகள்!
Feb 22, 2024, 08:26 PM IST
மேஷ ராசியில் குரு மற்றும் சுக்கிரனின் இணைவால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, 24 ஏப்ரல் 2024ஆம் ஆண்டு, மேஷ ராசியில் குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கை நடைபெறுகிறது. இதன் தாக்கம் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்துகிறது.
சமீபத்திய புகைப்படம்
ஒரு ராசியில் இரண்டு யோகங்கள் இணைவது, சம்யோகம் எனப்படுகிறது. அதிலும், சுக்கிரன் மற்றும் குருவின் சேர்க்கையால் உண்டாகும் யோகம், கஜலட்சுமியோகம் என அழைக்கப்படுகிறது.
இதனால் பூர்வீக சொத்தில் செல்வாக்கப் பெறுவர். சிறப்பான நிதி ஆதாயம், உடல் நிலையில் மேம்பாடு ஆகியவற்றைப் பெறுவார்கள்.
மேஷம்: குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால், மேஷ ராசிக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கும். எதிர்பாராத இடங்களில் எல்லாம் இருந்து பணம் கிட்டும். மேஷ ராசியினருக்கு தொழிலில் முன்னேற்றம், பணியில் திருப்தி, பிணக்குகள் நீங்கி திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாதல் மற்றும் சுற்றத்தாரின் அன்பு ஆகியவை கிடைக்கும். நீங்கள் வெகுநாட்களாக எதிர்பார்த்து கிடைக்காத நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
மிதுனம்: இந்த ராசியினருக்கு ஏப்ரல் 24ஆம் தேதி சேரும் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் நன்மைகள் கிடைக்கும். இக்கால கட்டத்தில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கைவந்துசேரும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிட்டும். இக்காலகட்டத்தில் புதிய தொழில் தொடங்கினால் மிதுன ராசியினர் வெற்றிபெறுவார்.
கடகம்: குரு மற்றும் சுக்கிரனின் இணைவால், அதிர்ஷ்டம் கிடைக்கும். கடகராசியினர், இந்த காலகட்டத்தில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள். ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்துடன் தரமான நேரத்தைச் செலவு செய்வீர்கள். மகிழ்ச்சியைத்தரும் சாதகமான செய்திகள் வந்துசேரும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்