தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Bhagavan: சனிக்கிழமை இதெல்லாம் கொடுக்காதீங்க..சனிபகவானுக்கு கோபம் வரும்!

Sani Bhagavan: சனிக்கிழமை இதெல்லாம் கொடுக்காதீங்க..சனிபகவானுக்கு கோபம் வரும்!

Jul 22, 2023, 09:50 AM IST

google News
சனிக்கிழமைகளில் கண்டிப்பாக இந்த பொருட்களை கொடுத்தால் சனிபகவானுக்கு கோபம் வரும்.
சனிக்கிழமைகளில் கண்டிப்பாக இந்த பொருட்களை கொடுத்தால் சனிபகவானுக்கு கோபம் வரும்.

சனிக்கிழமைகளில் கண்டிப்பாக இந்த பொருட்களை கொடுத்தால் சனிபகவானுக்கு கோபம் வரும்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவானை பார்த்து பயப்படாதவர்கள் இருக்க முடியாது. சனிபகவானுக்கு உரிய நாளாக சனிக்கிழமை கருதப்படுகிறது. சனிக்கிழமையில் பரிகாரங்கள் செய்வதால் சனிபகவானின் கோபம் குறையும். அதேசமயம் இந்த குறிப்பிட்ட பத்து பொருட்களை எந்த ஒரு ரீதியிலும் யாருக்கும் சனிக்கிழமையில் கொடுக்கக் கூடாது அப்படி கொடுத்தால் சனி பகவானின் தீராத கோபத்திற்கு ஆளாகி விடுவோம் என கூறப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

’டிசம்பர் 16இல் வக்ர நிவர்த்தியாகும் புதன்!’ அதிர்ஷ்டத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்! இனி இவங்கள தொடவே முடியாது!

Dec 04, 2024 08:29 PM

சனி தரும் முக்கியமான பலன்கள்.. 3 ராசிகள் தலைக்கு மேல் கொட்டப் போகிறது.. வந்துவிட்டது யோகம்..!

Dec 04, 2024 03:49 PM

சுக்கிரன் - ராகு சேர்க்கை.. 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுது.. !

Dec 04, 2024 12:34 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.04 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Dec 04, 2024 11:08 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.04 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Dec 04, 2024 10:45 AM

கொட்டி தீர்க்கும் குரு.. இனி தடுக்க முடியாது.. இந்த ராசிகள் மீது கை வைக்காதீங்க.. சும்மா விடமாட்டார்!

Dec 04, 2024 10:25 AM

முத்து

சனிக்கிழமையில் தவறும் யாருக்கும் முத்தை பரிசாக வழங்க கூடாது. அப்படி செய்தால் இருவரின் குடும்பத்திற்கும் பாதிப்புகள் ஏற்படும் என கூறப்படுகிறது.

சாக்லேட்

சனிக்கிழமை அன்று யாருக்கும் சாக்லேட் கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் அவர்களின் மனநிலையில் சில தடுமாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் நிலையில்லாத மனநிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

வெள்ளி

யார்க்கேனும் வெள்ளி நகை வாங்கி கொடுத்தால் அதனை சனிக்கிழமையில் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி செய்தால் குடும்பத்தில் மிகப்பெரிய பொருளாதார நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.

கத்திரிக்கோல்

இருப்பு பொருட்களாலான கத்திரிக்கோலை சனிக்கிழமை அன்று வாங்கவும், கொடுக்கவும் கூடாது. அப்படி செய்தால் உறவுகளில் சிக்கல்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

மல்லிகை திரவியம்

மல்லிகை மனம் கொண்ட வாசனை திரவியத்தை சனிக்கிழமை அன்று யாருக்கும் வாங்கி கொடுக்க கூடாது. ஒருவேளை அப்படி கொடுத்தால் வரும் காலங்களில் உயிரிழக்கும் பாதிப்புகள் கூட ஏற்படலாம் என கூறப்படுகிறது.

ஆரஞ்சு வண்ண இனிப்புகள்

பொதுவாக விசேஷம் என்றால் மற்றவர்களுக்கு இனிப்பு வாங்கி கொடுப்பது நமது வழக்கம். அப்படி சனிக்கிழமைகளில் யாருக்கேனும் இனிப்பு வாங்கி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஆரஞ்சு நிலை இனிப்புகளை தவிர்ப்பது நல்லது. அப்படி ஒரு வேலை கொடுத்தால் குடும்பத்தில் யாருக்கேனும் விபத்து உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வெள்ளை ஆடைகள்

குறிப்பாக சனிக்கிழமைகளில் யாருக்கும் வெள்ளை நிற ஆடைகளை வாங்கிக் கொடுக்கக் கூடாது. அப்படி செய்தால் திருமணம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

உலோக பாத்திரம்

தாமிரம் மற்றும் செம்பு போன்ற உலோகங்களால் ஆன பொருட்களை யாருக்கும் பரிசாகவோ, வாங்கியோ கொடுக்கக் கூடாது. அப்படி செய்தால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகிர்கள் என கூறப்படுகிறது.

சிவப்பு நிற பேனா

சனிக்கிழமை அன்று யாருக்கும் பேனாவை பரிசாக கொடுக்கக் கூடாது. குறிப்பாக சிவப்பு நிற பேனாவை கொடுக்கக் கூடாது. அப்படி ஒரு வேளை கொடுத்தால் பண இழப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

அடுத்த செய்தி