Mangala Gowri Pooja: கேட்ட வரத்தை கொடுக்கும் மங்கள கௌரி பூஜை.. எப்படி வழிபடுவது?
Jul 25, 2023, 09:51 AM IST
மங்கள கௌரி பூஜை செய்தால் ஏற்படும் சிறப்புகள் பற்றி பார்க்கலாம்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது என்பதால் இந்த மாதம் அம்மனுக்கு சக்தி அதிகமாக இருக்கும். இந்த மாதம் வெள்ளிக்கிழமை, செவ்வாய் கிழமைளில் அம்மனை வழிபட்டால் முழு ஆசியும் கிடைக்கும்.
சமீபத்திய புகைப்படம்
ஷ்ரவண செவ்வாய் அன்று பெண்கள் மிகுந்த பக்தியுடன் மங்கள கௌரி விரதத்தை மேற்கொள்வது நல்லது. இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும் பக்தர்களுக்கு பார்வதி தேவி அருள் புரிவார் என்பது நம்பிக்கை.
மங்கள கௌரி விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் அம்மனுக்கு பழங்கள், பூக்கள், தாம்பூலம், இனிப்பு, 16 கண்ணாடிகள் மற்றும் பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். பூஜையில் 16 தோரணங்களைச் சமர்ப்பிப்பது அம்மனுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பது நம்பிக்கை.
பூஜையின் போது மங்களகௌரி வ்ரத கதையை படித்து பக்தி சிரத்தையுடன் வழிபட வேண்டும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும் என்றும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
ஷ்ராவண மாதம் செவ்வாய்கிழமை பிரம்ம முஹூர்த்தம் அன்று எழுந்தருளி முதலில் நீராடி வழிபடும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். அம்மன் சிலை அல்லது புகைப்படம் முன்பாக சிவப்பு துணி விரித்து அதில் வைக்க வேண்டும். தட்டில் சிவப்புத் துணியை விரித்து கலசத்தை வைத்து விளக்கேற்றி பூஜையில் வைக்கவும். இவ்வாறு வழிபட்டால், திருமணமான பெண்கள் பார்வதி மாதாவின் அருளால் அளவற்ற மகிழ்ச்சி அடைவார்கள் என்பது நம்பிக்கை.
இந்து பஞ்சாங்கத்தின் படி, இந்த ஆண்டு மொத்தம் 9 மங்கள கௌரி விரதங்கள் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 4 அல்லது 5 மங்கள கௌரி விரதங்கள் மட்டுமே கடைபிடிக்கப்பட்டது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்