Sani Bagavan Luck: இரக்கமே இல்லாமல் அடிக்கும் சனிபகவான்.. வெல்லும் உத்தி என்ன? - ஜோதிடர் பேட்டி!
Jan 20, 2024, 07:56 PM IST
நல்ல கர்மாவை செய்தவனுக்கு அஷ்டமசனியோ அல்லது ஏழரை சனியோ அந்த காலத்தில் அவனுக்கு நல்ல பலன்களே கிடைக்கும். ஏனென்றால் அவன் தர்மகாரகன்.
சனி பகவானை வெல்வது எப்படி என்பதை பிரபல ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன், தன்னுடைய ஆஸ்ட்ரோ வெல் யூடியூப் சேனலில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக பேசி இருக்கிறார்.
சமீபத்திய புகைப்படம்
அவர் பேசும் போது, “ஏழரை சனி என்றால் கண்டிப்பாக பிரச்சினை இருக்கத்தான் செய்யும்; அதனை முதலில் நாம் மனதார ஒத்துக்கொள்ளதான் வேண்டும். சனி பகவானுக்கு நீங்கள் விரோதி அல்ல. சனி பகவானை பொருத்தவரை நல்ல கர்மாவை செய்தவன் அவருக்கு நண்பன் ஆகிறான்.
நல்ல கர்மாவை செய்தவனுக்கு அஷ்டமசனியோ அல்லது ஏழரை சனியோ அந்த காலத்தில் அவனுக்கு நல்ல பலன்களே கிடைக்கும். ஏனென்றால் அவன் தர்மகாரகன். தர்மத்திற்கு பேர் போனவன். மீனராசிக்கு ஏழரை சனி நடக்கிறது. அவர்களை பொருத்தவரை அவர்களுக்கு பொதுவாகவே நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும்.
ஆனால் அதையெல்லாம் இந்த காலகட்டத்தில் ஒத்தி வைத்துவிட்டு சாதாரணமாக வாழ பழகிக்கொள்ள வேண்டும்.அதாவது எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் சனி பகவானை வெல்வதற்கான உத்தி.
ஏழரை சனியில் சனி பகவான் உங்களது புத்தியை மழுங்கடிப்பார். எதை நீங்கள் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறீர்களோ, அதை செய்ய தூண்டுவார். எதை நீங்கள் பேசக்கூடாது என்று நினைக்கிறீர்களோ அதை பேச தூண்டுவார். இதுதான் உண்மை
இதிலிருந்து தப்பிப்பதற்கு உங்களது எண்ணங்களை அவ்வப்போது தூய்மை செய்ய வேண்டும். அதற்கு அதிகாலை 6 மணிக்கு முன்னதாக எழுந்து தியானம் செய்ய வேண்டும்.
எண்ணங்கள் தூய்மையாகும் பொழுதே, உங்களது வார்த்தைகளில் ஒரு விதமான பிடிப்பு தன்மை வரும். வார்த்தைகளில் பிடிப்பு வரும்பொழுது, உங்களது செயல்களிலும் ஒருவிதமான பிடிப்பு வரும்.
இவை மூன்றிலும் பிடிப்பு வரும் பொழுது உங்களது வாழ்க்கையிலும் ஒரு விதமான பிடிப்பு வரும். சனி பகவான் உங்களிடம் இருக்கும் செல்வத்தை பிடுங்குவார். ஆகையால் அவர் பிடுங்குவதற்கு முன்னதாகவே, நீங்கள் தான தர்மம் செய்ய வேண்டும்.
சனி பகவான் உறவுகளை பிரிக்கும் வேலையைச் செய்வார். ஆகையால் நீங்கள் உங்களது உறவுகளிடம் கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். பெரிய நந்தி இருக்கக்கூடிய சிவாலயங்களுக்குச் சென்று அங்கு இருக்கக்கூடிய பசுவிற்கு அகத்திக் கீரையை உணவாக கொடுக்க வேண்டும்.
டாபிக்ஸ்