Today Rasipalan (31.05.2024): மாதத்தின் கடைசி நாள்..மேஷம் முதல் மீனம் வரை... 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
May 31, 2024, 05:00 AM IST
Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (மே 31) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சிந்தனைகளில் புதிய பொலிவுடன் செயல்படுவீர்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும்.
ரிஷபம்
வழக்கு செயல்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்மட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும்.
மிதுனம்
கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். நிர்வாகத் துறையில் அறிமுகம் ஏற்படும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம் சார்ந்த சில அனுபவம் மேம்படும்.
கடகம்
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தேவைற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பொறுமையுடன் செயல்படவும். சுப காரியம் தொடர்பான செயல்களில் அலைச்சல் உண்டாகும். நிர்வாகத் துறைகளில் பொறுமையுடன் செயல்படவும்.
சிம்மம்
சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல் அதிகரிக்கும். புதுவிதமான அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.
கன்னி
உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பழைய சிக்கல்கள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும்.
துலாம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய திட்டங்கள் பற்றிய சிந்தனை மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றிகொள்வீர்கள்.
விருச்சிகம்
வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழல்கள் மறையும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும்.
தனுசு
நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குறுகிய தூர பயணங்களின் மூலம் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மாற்றம் ஏற்படும் நாள்.
மகரம்
குடும்பத்தில் உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள். வெளி வட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.
கும்பம்
தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நண்பர்கள் வட்டத்தில் சில புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். எதிலும் தனித்தன்மையோடு செயல்படுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை ஏற்படுத்தும்.
மீனம்
எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். தேவைற்ற செலவுகளை குறைப்பது நல்லது. முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் மேம்படும். மறைமுகமான தடைகளை புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து பழகுவது நல்லது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்